For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு இறுதி கர்ஜனை - விருப்பமான நினைவுகளை பகிர ரசிகர்களுக்கு கோரிக்கை

டெல்லி : அடுத்த ஆண்டுடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அறிவித்துள்ளார்.

28 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடிவரும் லியாண்டர் பயஸ், இதுவரை 7 ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி, கடந்த 1996ல் வெண்கல பதக்கம் வென்றவர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவில் அதிகபட்சமாக 44 வெற்றிகளை குவித்தவர் என்ற சாதனைக்கும் இவர் சொந்தக்காரர். 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் இவர் வென்று சாதனை புரிந்துள்ளார்.

பும்ரா சர்ச்சை.. முடிவு கட்டாம விடக்கூடாது.. டிராவிட்டை சந்திக்கும் கங்குலி.. அதிர வைக்கும் தகவல்!பும்ரா சர்ச்சை.. முடிவு கட்டாம விடக்கூடாது.. டிராவிட்டை சந்திக்கும் கங்குலி.. அதிர வைக்கும் தகவல்!

28 ஆண்டுகளாக டென்னிஸ்

28 ஆண்டுகளாக டென்னிஸ்

கடந்த 28 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடிவரும் இந்திய மூத்த வீரர் லியாண்டர் பயஸ் அடுத்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

44 டேவிஸ் கோப்பைகள் வெற்றி

44 டேவிஸ் கோப்பைகள் வெற்றி

டேவிஸ் கோப்பை டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் அதிகபட்சமாக 44 வெற்றிகளை குவித்த சாதனைக்கு சொந்தக்காரர் லியாண்டர் பயஸ்.

105வது இடத்திற்கு இறக்கம்

105வது இடத்திற்கு இறக்கம்

இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த லியாண்டர் பயஸ், தற்போது, 105வது இடத்திற்கு இறங்கியுள்ளார். கடந்த 19 வருடங்களில் முதல் 100 இடத்தில் இடம்பிடிக்காதது இதுவே முதல்முறை.

இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்

இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள்

லியாண்டர் பயஸ் இதுவரை 18 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை புரிந்துள்ளார். தன்னுடைய ஆட்டத்தின்மூலம் உலகெங்கிலும் அதிகமான ரசிகர்களை கொண்டவர் பயஸ்.

வெண்கல பதக்கம் வென்று சாதனை

வெண்கல பதக்கம் வென்று சாதனை

லியாண்டர் பயஸ் 7 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஒரே இந்தியர் என்ற சாதனையையும் புரிந்துள்ளார். கடந்த 1996ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்று இவர் வரலாறு படைத்துள்ளார்.

ரசிகர்களுக்கு நன்றி

ரசிகர்களுக்கு நன்றி

இத்தகைய சாதனைகளுக்கு சொந்தக்காரராக விளங்கும் லியாண்டர் பயஸ், அடுத்த ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெறப்போவதாக தனது டிவிட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

அணியினருடன் பயணித்து ஆட்டம்

அணியினருடன் பயணித்து ஆட்டம்

அடுத்த ஆண்டில் சில தேர்ந்தெடுத்த போட்டிகளை தனது அணியினருடன் சேர்ந்து விளையாடவுள்ளதாகவும் தனது நண்பர்கள், ரசிகர்களுடன் மகிழ்ச்சியை கொண்டாட உள்ளதாகவும் பயஸ் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரிகள், மகளுக்கு நன்றி

சகோதரிகள், மகளுக்கு நன்றி

இந்த தருணத்தில் தனக்கு பலவகையிலும் உதவிபுரிந்த தன்னுடைய பெற்றோர்களுக்கும் சகோதரிகளுக்கும் மகள் அயானாவிற்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இனிப்பான தருணங்களை பதிவிட கோரிக்கை

இந்நிலையில் இறுதி கர்ஜனை என்ற பெயரில் தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ள லியாண்டர் பயஸ், தன்னை குறித்த இனிமையான நினைவுகளை பகிர்ந்துக் கொள்ள ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Story first published: Thursday, December 26, 2019, 18:01 [IST]
Other articles published on Dec 26, 2019
English summary
Leander Paes announces his retirement next year from Professional Tennis
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X