For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விம்பிள்டன்... பெடரர், நடாலுக்கு ஈஸி வெற்றி... இந்தியாவின் யூகி பாம்ப்ரி "அவுட்"!

By Aravinthan R

விம்பிள்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஆடவரர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் ரபேல் நடால், ரோஜர் பெடரர் ஆகியோர் எளிதாக வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

இந்தியாவின் யூகி பாம்ப்ரி இத்தாலியின் தாமஸ் பாப்பியானோவிடம் தோல்வி அடைந்து வெளியேறினார். நடப்பு விம்பிள்டன் சாம்பியனும், ஆண்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவருமான ரோஜர் பெடரர், 58வது இடத்தில் இருக்கும் செர்பியாவின் டுசான் லாஜோவிக்கை 6-1, 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.

Nadal Federer won first round of Wimbledon

பெடரர் இரண்டாவது சுற்றில் ஸ்லோவாகியாவின் லூகாஸ் லேக்கோவை சந்திக்கிறார். தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ரபேல் நடால், இஸ்ரேலின் டுடி சீலாவை 6-3, 6-3, 6-2 என்ற செட்களில் எளிதாக வீழ்த்தி இரண்டவாது சுற்றுக்கு முன்னேறினார். சென்ற ஆண்டு நான்காவது சுற்றோடு நடால் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. தன் பதினோராவது பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்ற பின் எந்த போட்டியிலும் பங்கேற்காத நடால், சில மாத ஓய்வுக்குப் பின் தற்போது விம்பிள்டனுக்கு திரும்பியுள்ளார்.

இது குறித்து கூறுகையில், "இந்த ஆட்டம் எனக்கு மிகவும் நேர்மறை உணர்வுகளை கொடுத்துள்ளது. இன்னும் கூட சிறப்பாக செயல்படவேண்டும். சிறிது இடைவெளிக்கு பின் புல்வெளியில் ஆடும் போது, நேர் செட்களில் வெற்றி பெற்று தொடங்க வேண்டியது மிகவும் முக்கியம்" என்றார்.

விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்ற ஒரே இந்தியரான யூகி பாம்ப்ரி முதல் சுற்றிலேயே வெளியேறி ஏமாற்றத்தை அளித்துள்ளார். தரவரிசையில் 85வது இடத்தில் இருக்கும் பாம்ப்ரி, 133வது இடத்தில் இருக்கும் இத்தாலியின் தாமஸ் பாபியானோவிடம் 6-2, 3-6, 3-6, 2-6 என்ற செட்களில் தோல்வியடைந்தார். முதல் செட்டை பாம்ப்ரி கைப்பற்றினாலும், அடுத்தடுத்த செட்களை இழந்து தோல்வியை தழுவினார்.

சென்ற ஆண்டில் விம்பிள்டன் இறுதிப் போட்டியில் பெடரரிடம் தோற்று இரண்டாம் இடம் பிடித்த செலிக், முன்னணி வீரர்களான அலெக்ஸாண்டர் சீவேரேவ், டெல் பொட்ரோ, ஆண்டர்சன், டிஜோகொவிக் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் கிரிகோர் டிமிட்ரோவ், டொமினிக் தியம், டேவிட் கோப்பின், போர்னா கோரிக் ஆகியோர் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தனர். இதில் போர்னா கோரிக், சில நாட்கள் முன்பு நடந்த ஹாலே ஓபன் தொடரின் இறுதியில் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 4, 2018, 12:07 [IST]
Other articles published on Jul 4, 2018
English summary
Federer, Nadal enters the second round of Wimbledon after easy straight sets victory. India's Yuki Bhambri failed to shine.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X