For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வரலாறு படைத்தார் ஜோகோவிக்.. முதல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்றார்.. !

பாரீஸ்: உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிக். நேற்று பாரீஸில் நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரேவை வீழ்த்தி ஆடவர் ஒற்றையர் பிரெஞ்சு ஓபன் பட்டத்தைப் பெற்றார். இறுதிதிப் போட்டியில் முர்ரேவை 3-6, 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிக் வீழ்த்தி பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

இது ஜோகோவிக்குக்கு 12வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். மேலும் ஒரே ஆண்டில் அனைத்து (பிரெஞ்சு ஓபன், ஆஸ்திரேலியன் ஓபன், அமெரிக்க ஓபன் மற்றும் விம்பிள்டன்) கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்ற சாதனையையும் படைத்தார் ஜோகோவிக். இதற்கு முன்பு 1938ல் டான் பட்ஜ், 1962 மற்றும் 1969ல் ராட் லீவர் ஆகியோர் இந்த சாதனையைப் படைத்திருந்தனர்.

Novak Djokovic beats Andy Murray to clinch maiden French Open title

29 வயதான ஜோகோவிக் போட்டி முடிவில் பேசுகையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணாகும். மிகப் பெரிய தருணமாகும். இங்கு நான் 3 முறை இறுதிப் போட்டியில் தோற்றேன். தற்போது 4வது முறையாக எனக்கு இது வாய்த்துள்ளது மிக மிக விசேஷமாகும். இங்குள்ள ரசிகர்களின் அன்புக்கு நன்று என்றார் ஜோகோவிக்.

Novak Djokovic beats Andy Murray to clinch maiden French Open title

ஜோகோவிக்குக்கு இதுதான் முதல் பிரெஞ்சு ஓபன் பட்டமாகும். மற்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிக்குக்கு பிரெஞ்சு ஓபன் பட்டம் மட்டும் சாத்தியமாகமாமல் இருந்தது. 3 முறை அவர் இறுதிப் போட்டி வரை வந்தும் கூட வெல்ல முடியவில்லை. இப்போதுதான் முதல் முறையாக பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

Novak Djokovic beats Andy Murray to clinch maiden French Open title

இந்த ஆண்டில் அவர் மோதிய தொடர்ச்சியான 6வது முக்கிய இறுதிப் போட்டி இது. மேலும் இது அவருக்கு மொத்தமாக 20வது இறுதிப் போட்டியாகும்.

Story first published: Monday, June 6, 2016, 10:43 [IST]
Other articles published on Jun 6, 2016
English summary
The world number one downed old rival Andy Murray 3-6, 6-1, 6-2, 6-4 to claim a 12th career Major and join Don Budge in 1938 and Rod Laver, in 1962 and 1969, as the only players to simultaneously possess the French Open, Australian Open, US Open and Wimbledon trophies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X