பரபரப்பான ஆஸ்திரேலிய ஓபன்.. மீண்டும் பட்டம் வென்றார் பெடரர்!

Posted By:

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ரோஜர் பெடரர் பட்டம் வென்று இருக்கிறார். இதோடு இவர் ஆறாவது முறையாக இந்த பட்டத்தை வென்று இருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் ரோட் லெவர் ஏரியான பகுதியில் இன்று ஆஸ்திரேலிய ஓபன் இறுதி போட்டி நடைபெற்றது. ரோஜர் பெடரருக்கும் மாரின் கிளிக் இருவருக்கும் இறுதி போட்டி நடைபெற்றது.

Roger Federer lifts Australia Open title

இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் மற்றும் மூன்றாவது சுற்றை ரோஜர் வென்றார். இரண்டாவது மற்றும் நான்காவது சுற்றை மாரின் வென்றார்.

இதனால் கடைசி சுற்று மிகவும் விறுவிறுப்பாக சென்றது. கடைசியில் 6-2, 6-7, 6-3, 3-6, 6-1 செட்களில் ரோஜர் வெற்றிபெற்றார். இவர் இதோடு ஆறாவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வெல்கிறார்.

Story first published: Sunday, January 28, 2018, 17:39 [IST]
Other articles published on Jan 28, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற