For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார் சானியா மிர்சா

By Veera Kumar

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் புருனோ சோரஸ் ஜோடி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா பிரேசிலின் புருனோ சோரஸ் ஜோடி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Sania Mirza-Bruno Soares win US Open mixed doubles title

நேற்று நடந்த கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் சானியா மிர்சா-புருனோ சோரஸ் ஜோடி, அமெரிக்காவின் அபிகேல் ஸ்பியர்ஸ்- மெக்சிகோவின் சான்டிகோ கோன்சிலஸ் ஜோடியை 6-1, 2-6, 11-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

சானியா மிர்சா வென்ற 3வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக 2009ல் ஆஸ்திரேலிய ஓபன், 2012ல் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகளின் கலப்பு இரட்டையர் ஆட்டங்களிலும் சானியா வெற்றியை ருசித்துள்ளார். அதே நேரம் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியாவின் அதிகபட்ச சாதனை பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதி சுற்றுவரை சென்றதாகும். கோப்பை எதையும் வெல்லவில்லை.

Story first published: Saturday, September 6, 2014, 10:41 [IST]
Other articles published on Sep 6, 2014
English summary
India's Sania Mirza and Brazilian Bruno Soares beat American-Mexican pair Abigail Spears and Santiago Gonzalez in the final to win the US Open mixed doubles title on Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X