For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சானியா- ஹிங்கிஸ் "தூள்".... ஆஸி. மகளிர் இரட்டையர் பட்டத்தை வென்றனர்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸா - சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது.

இப்போட்டித் தொடரில் ஆரம்பம் முதலே அசத்தி வரும் சானியா -ஹிங்கிஸ் ஜோடி, இறுதிப் போட்டியில் செக் நாட்டின் ஆண்ட்ரியா ஹெவகோவா- லூசி ஹிரடெக்கா ஜோடியை நேர் செட்களில் வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் சானியா - ஹிங்கிஸ் ஜோடி, 7-6, 6-3 என்ற நேர் செட்களில் செக் ஜோடியா காலி செய்து சாம்பியன் ஆனது.

3வது பட்டம்

3வது பட்டம்

இது சானியா -ஹிங்கிஸ் ஜோடிக்கு தொடர்ச்சியான 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் ஹாட்ரிக் அடித்துள்ளனர்.

முதல் செட்டில் போராட்டம்

முதல் செட்டில் போராட்டம்

இந்தப் போட்டியின் முதல் செட்டில் சானியா ஜோடியை, செக் ஜோடியை ரொம்பவே சோதித்தது. போராடித்தான் முதல் செட்டை சானியா ஜோடி பறித்தது.

2வது செட்டில் அசத்தல்

2வது செட்டில் அசத்தல்

அதேசமயம், 2வது செட்டை இந்த ஜோடி அதிரடியாக ஆடி வென்று பட்டத்தையும் சுவைத்தது.

ஹிங்கிஸுக்கு 12வது பட்டம்

ஹிங்கிஸுக்கு 12வது பட்டம்

இது மார்ட்டினா ஹிங்கிஸுக்கு 12வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். ஒட்டுமொத்தத்தில், சானியாவுக்கு இது 6வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

சானியாவுக்கு 3வது இரட்டையர் கிராண்ட்ஸ்லாம்

சானியாவுக்கு 3வது இரட்டையர் கிராண்ட்ஸ்லாம்

சானியா மிர்ஸா பெற்றுள்ள 3வது இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் பட்டங்களை அவர் வென்றிருந்தார்.

கலப்பு இரட்டையரிலும் வெல்வாரா சானி்யா?

கலப்பு இரட்டையரிலும் வெல்வாரா சானி்யா?

தற்போது சானியா மிர்ஸா, குரோஷியாவின் இவான் டோடிக்குடன் இணைந்து இன்னொரு கிராண்ட்ஸாலம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு உள்ளது. கலப்பு இரட்டையர் அரை இறுதியில் இந்த ஜோடி தகுதி பெற்றுள்ளது. இறுதிக்கு முன்னேறி அதிலும் வென்றால் சானியாவுக்கு அது டபுள் போனஸாக அமையும்.

Story first published: Friday, January 29, 2016, 14:24 [IST]
Other articles published on Jan 29, 2016
English summary
Sania Mirza and Martina Hingis continued their winning march as they pocketed the Australian Open women's doubles title today at the Melbourne Park. The Indo-Swiss pair defeated Czech Republic duo of Andrea Hlavackova-Lucie Hradecka 7-6, 6-3 to claim the title on Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X