அக்காவை அடித்து நொறுக்கி அரை இறுதிக்குள் புகுந்த செரீனா

By Sutha

நியூயார்க்: அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை அதிரடியாக வீழ்த்தி அரை இறுதிக்குள் புயலென நுழைந்துள்ளார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.

தனது முழு சக்தியையும் திரட்டி வீனஸை வீழ்த்தியுள்ளார் செரீனா. வீனஸ் இந்தப் போட்டியில் ஒரு செட்டை மட்டும் கைப்பற்ற, 2 செட்களை வென்று வெற்றியைக் கட்டி அணைத்தார் செரீனா.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை மேலும் நெருங்கியுள்ளார் செரீனா. இப்போட்டியில் 6-2, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ், தனது மூத்த சகோதரியை வீழ்த்தினார்.

பக்கா ஆட்டம்

பக்கா ஆட்டம்

செரீனாவும், வீனஸும் இதுவரை மொத்தம் 26 முறை மோதியுள்ளனர். அதில் 15 வெற்றிகளை செரீனாவும், 11 வெற்றிகளை வீனஸும் பெற்றிருந்தனர். இந்த பின்னணியுடன் காலிறுதிப் போட்டியில் இருவரும் சந்தித்தனர். சரியான ஆட்டமாக இது அமைந்தது.

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்

உன் விழியும் என் வாளும் சந்தித்தால்

இருவரும் புயல் போல ஆடினார்கள். ஒருவருக்கொருவர் சளைக்கவில்லை. விட்டுக் கொடுக்கவில்லை. மைதானத்தையே ரணகளமாக்கி விட்டனர். இறுதியில் செரீனாவுக்கே வெற்றி வாய்ப்பு கூடி வந்தது.

கடும் சவால் விடுத்த வீனஸ்

கடும் சவால் விடுத்த வீனஸ்

வீனஸின் ஆட்டத்தில் நேற்று அனல் பறந்தது. செரீனாவுக்கு செமத்தியான போட்டியாக மாறி நின்றார் வீனஸ். இதனால் செரீனா முழு பலத்தையும் திரட்டி திறமைகளை காட்ட நேரிட்டது.

முதல் செட் எனக்கு.. 2வது செட் எனக்கு

முதல் செட் எனக்கு.. 2வது செட் எனக்கு

முதல் செட்டை செரீனா 6-2 என்ற கணக்கில் வென்ற நிலையில் அடுத்த செட்டில் வீனஸ் அதகளம் செய்து விட்டார் 6-1 என்ற கணக்கில் அதை வீனஸ் கைப்பற்ற டென்ஷனாகி விட்டது செரீனாவுக்கு.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

அதன் பிறகு அவர் அதிரடியில் குதித்தார். அடுத்த செட்டை அவர் 6-3 எண்ற கணக்கி் கைப்பற்ற போட்டி முடிவுக்கு வந்தது. 3வது செட்டிலும் வீனஸின் ஆட்டம் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டென்னிஸா.. குத்துச் சண்டையா

டென்னிஸா.. குத்துச் சண்டையா

இந்தப் போட்டியைப் பார்த்தவர்களுக்கு இது டென்னிஸ் போட்டியா இல்லை பாக்ஸிங் போட்டியா என்று சந்தேகம் வந்து விட்டது. அந்த அளவுக்கு இரு சகோதரிகளும் அதிரடியாக புயலாக மாறி புழுதி கிளப்பி விட்டனர்.

செம ஆட்டம் பாஸ்

செம ஆட்டம் பாஸ்

98 நிமிடம் நீடித்த இந்தப் போட்டிக்குப் பிறகு தங்கை செரீனாவைக் கட்டி அணைத்து வாழ்த்து தெரிவித்தார் வீனஸ். செரீனாவும், அக்காவின் ஆட்டத்தைப் பாராட்டி கட்டி அணைத்துக் கொண்டார். இருவரும் உணர்ச்சிப் பெருக்குடன் காணப்பட்டனர்.

வீராங்கனைன்னா இவர்தான்

வீராங்கனைன்னா இவர்தான்

பின்னர் செரீனா கூறுகையில், மாபெரும் தருணம் இது. இதுவரை நான் ஆடிய வீராங்கனைகளியே கடுமையான போட்டியைக் கொடுத்தவர் வீனஸ்தான். என்னால் இந்தப் போட்டியை மறக்கவே முடியாது என்றார்.

வின்சியுடன் அடுத்த மோதல்

வின்சியுடன் அடுத்த மோதல்

அடுத்து அரை இறுதியில் இத்தாலியின் ராபர்ட்டா வின்சியுடன் மோதவுள்ளார் செரீனா. வின்சி, தனது காலிறுதிப் போட்டியில் பிரான்சின் கிறிஸ்டினா மெலடோனோவிக்கை 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
Serena Williams kept her bid for a calendar-year Grand Slam intact by outslugging older sister Venus 6-2 1-6 6-3 in a power-packed quarter-final at the U.S. Open on Tuesday. The 33-year-old top seed, winner of 21 grand slam singles titles, took charge of the opening set by securing service breaks in the fifth and seventh games of a match that felt like a heavyweight title bout after a brilliant start by Venus.
Story first published: Wednesday, September 9, 2015, 12:54 [IST]
Other articles published on Sep 9, 2015
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more