For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரீனா வில்லியம்ஸுக்கு ரொம்ப ஆசையா இருக்காம்.. சொல்கிறார் கோச்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் விளையாட ரொம்ப ஆசையுடன் இருக்கிறாராம் செரீனா வில்லியம்ஸ். இதை அவரது பயிற்சியாளர் பாட்ரிக் மோர்ட்டோகுளோ கூறியுள்ளார்.

உலகெங்கும் கொரோனா காரணமாக எல்லாமே முடங்கிப் போயுள்ளன. விளையாட்டுப் போட்டிகளுக்கும் இதே கதிதான். இந்த நிலையில், மெல்ல மெல்ல பல நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த நிலையில்தான் அமெரிக்க ஓபன் போட்டியில் ஆட செரீனா ஆர்வமாக இருப்பதாக அவரது பயிற்சியாளர் பாட்ரிக் கூறியுள்ளார். சக அமெரிக்க வீராங்கனையான மார்கரெட் கோர்ட்டின் அமெரிக்க ஓபன் பட்ட சாதனையை முறியடிக்கவும் செரீனா ஆர்வமாக இருக்கிறாராம்.

இவரை எல்லாம் வைச்சுகிட்டு என்னத்த பண்றது? இந்திய அணி பயிற்சியாளரை விளாசிய யுவராஜ் சிங்.. ஓபன் டாக்!இவரை எல்லாம் வைச்சுகிட்டு என்னத்த பண்றது? இந்திய அணி பயிற்சியாளரை விளாசிய யுவராஜ் சிங்.. ஓபன் டாக்!

எப்போது தொடங்கும்

எப்போது தொடங்கும்

ஆகஸ்ட் 31ம் தேதி அமெரிக்க ஓபன் போட்டிகள் தொடங்கும் என முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக அதில் குழப்பம் நிலவுகிறது. விரைவில் இதுதொடர்பான உறுதியான தகவல் வெளியாகும் எனத் தெரிகிறது. திட்டமிட்டபடி போட்டிகள் நடந்தால் நிச்சயம் அதில் கலந்து கொண்டு ஆட செரீனா தயாராக இருக்கிறாராம்.

ரபேல் வர வாய்ப்பில்லை

ரபேல் வர வாய்ப்பில்லை

அதேசமயம், நடப்பு சாம்பியன் ரபேல் நடால் போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக இல்லை. நியூயார்க் நகரம்தான் கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரம். எனவே ரிஸ்க் எடுத்து வந்து ஆட அவர் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் வருவதற்கு ஆர்வமாக உள்ளாராம்.

24வது பட்டம்

24வது பட்டம்

செரீனா வில்லியம்ஸ் கடந்த முறை 2வது இடத்தையே பெற முடிந்தது. கடந்த முறை இறுதிப் போட்டியில் தோற்றதை இந்த முறை பிடித்து விட அவர் ஆர்வமாக உள்ளாராம். இந்த முறை அவர் பட்டம் வென்றால் அது அவருக்கு 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். எனவே கிராண்ட்ஸ்லாம் பட்ட சாதனைக்கும் அவர் ஆயத்தமாகி வருகிறார். வீட்டிலேயே அவர் தீவிர பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.

உடம்பு நல்லாருக்கு

உடம்பு நல்லாருக்கு

கடந்த 2017ம் ஆண்டுதான் செரீனாவுக்கு அலெக்ஸிஸ் ஒலிம்பியா என்ற மகள் பிறந்தார். அதன் பிறகும் கூட அவர் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு உடம்பை ஃபிட்டாக வைத்துள்ளார். எனவே போட்டிகள் எப்போது தொடங்கினாலும் விளையாடும் தகுதியுடன் செரீனா இருப்பதாக பாட்ரிக் கூறுகிறார். அதேசமயம், 3 வார காலம் அவர் தனது மகளைப் பிரிந்து இருக்க வேண்டும். அது ஒன்றுதான் உணர்ச்சிப் பூர்வமானது என்றும் பாட்ரிக் கூறுகிறார்.

Story first published: Tuesday, June 16, 2020, 12:43 [IST]
Other articles published on Jun 16, 2020
English summary
She's definitely come back to tennis to win grand slams; that's her goal -Coach
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X