டபள்யூ.டி.ஏ. ஆக்லாந்து கிளாசிக் போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய செரினா வில்லியம்ஸ்

ஆக்லாந்து : டென்னிஸ் உலகின் மகளிர் சூப்பர்ஸ்டாராக விளங்கும் செரினா வில்லியம்ஸ் டபள்யூ.டி.ஏ. ஆக்லாந்து கிளாசிக் தொடரின் இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை தன்னை எதிர்த்து போட்டியிட்ட டென்னிஸ் உலகின் இளம் நட்சத்திரம் அமென்டா அனிசிமோவாவை 6க்கு 1 மற்றும் 6க்கு 1 என்ற செட்கணக்கில் வீழ்த்தி செரினா வில்லியம்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுல்லாவை எதிர்த்து அவர் போட்டியிடவுள்ளார். ஜெசிகா பெகுல்லா அரையிறுதியில் கரோலின் வோஸ்னியாக்கியுடனான போட்டியில் 3க்கு 6, 6க்கு 4 மற்றும் 6க்கு பூஜ்ஜியம் என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

செரினா வில்லியம்ஸ் சாதனை

செரினா வில்லியம்ஸ் சாதனை

கடந்த 20 ஆண்டுகளாக டென்னிஸ் உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கி வருபவர் செரினா வில்லியம்ஸ். இரண்டு வயது குழந்தைக்கு தாயாக உள்ள செரினா, தன்னுடைய ஆட்டத்தை விட்டுக்கொடுக்காமல் விளையாடக் கூடியவர்.

24வது கிராண்ட் ஸ்லாமை வெல்ல தீவிரம்

24வது கிராண்ட் ஸ்லாமை வெல்ல தீவிரம்

குழந்தை பேற்றுக்கு பிறகு மீண்டும் களம்கண்டு ஆடிவரும் செரினா வில்லியம்ஸ் தனது ஆட்டத்தில் பல அதிரடிகளை செய்து வருகிறார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் தனது 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைகொள்ள இவர் தீவிரமாக உள்ளார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

இந்நிலையில் டபள்யூ.டி.ஏ. ஆக்லாந்து கிளாசிக் தொடரின் அரையிறுதியில் 18 வயதான டென்னிஸ் உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிவரும் அமென்டா அனிசிமோவாவை எதிர்த்து கடந்த சனிக்கிழமை போட்டியிட்ட செரினா வில்லியம்ஸ் அவரை 6க்கு 1 மற்றும் 6க்கு 1 என்ற செட்கணக்கில் வெற்றிகொண்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

வெற்றி முனைப்பில் செரினா

வெற்றி முனைப்பில் செரினா

இரண்டு வயது குழந்தைக்கு தாயாக இருந்தபோதிலும், வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு முனைப்புடன் ஆடி வருவதாகவும் இதற்கென பல ஆண்டுகளாக கடும் பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும் செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டிக்கு தயாராகும் செரினா

இறுதிப்போட்டிக்கு தயாராகும் செரினா

இந்நிலையில் அரையிறுதியில் கரோலின் வோஸ்னியாக்கியை 3க்கு 6, 6க்கு 4 மற்றும் 6க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றிகொண்ட ஜெசிக்கா பெகுல்லாவுடன் இறுதிப்போட்டியில் செரினா மோதவுள்ளார்.

ஆக்லாந்து அரையிறுதியில் தோல்வி

ஆக்லாந்து அரையிறுதியில் தோல்வி

டபள்யூ.டி.ஏ. ஆக்லாந்து கிளாசிக் அரையிறுதிப் போட்டியில் தோல்வியுற்ற கரோலின் வோஸ்னியாக்கி இதுவரை 29 டைட்டில்களை வென்றுள்ள நிலையில், தன்னுடைய 30வது டைட்டிலை பூர்த்திசெய்ய முயன்று தோற்றுள்ளார்.

இரட்டையர் பிரிவில் மோதும் வோஸ்னியாக்கி

இரட்டையர் பிரிவில் மோதும் வோஸ்னியாக்கி

இந்நிலையில் ஆக்லாந்து டைட்டிலை வெல்ல வோஸ்னியாக்கிக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம் உள்ளது. இன்று அவர் செரினா வில்லியம்சுடன் இணைந்து இரட்டையர் பிரிவில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
WTA Auckland Classic : Serena Williams will face Jessica Pegula in finals
Story first published: Sunday, January 12, 2020, 13:31 [IST]
Other articles published on Jan 12, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X