For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்துவிட்டீர்கள் பி.வி. சிந்து..! ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

Recommended Video

P.V. Sindhu on winning World Badminton Championships gold

பேசல்: உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றுள்ள பி.வி. சிந்துவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் இறுதி போட்டியில், ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். இறுதிப்போட்டியில் 21-7, 21-7 என்ற நேர் செட்களில் நசோமி ஒகுஹாராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதன்மூலம் உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டனில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார். உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வாழ்த்து

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: பி.வி.சிந்து தங்கம் வென்றதன் மூலம் ஒட்டுமொத்த நாடும் பெருமைகொள்ள வேண்டிய தருணம் இது. சிந்துவின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி கோடிக்கணக்கானவர்களை கவர்ந்திருக்கிறது. வருங்கால போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

பெருமைப்படுத்திய சிந்து

பிரதமர் மோடியும் டுவிட்டரில் தமது வாழ்த்து செய்தியை வெளியிட்டு இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: இந்தியாவை மீண்டும் பெருமை கொள்ளச் செய்திருக்கும் பி.வி. சிந்துவிற்கு வாழ்த்துகள். இந்தியாவை மீண்டும் பெருமைப் படுத்தி இருக்கிறார். அவரது வெற்றி வருங்கால வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அமையும் என்று பதிவிட்டுள்ளார்.

இளம் தலைமுறை

திமுக தலைவர் மு.க .ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பி.வி.சிந்துவின் வெற்றி வருங்கால இளம் தலைமுறையினருக்கு உத்வேகமாக இருக்கும். அவர் வரும்காலங்களில் பல வெற்றிகளை பெற நான் வாழ்த்துகிறேன் என்று கூறியிருக்கிறார்.

லக்ஷ்மன் வாழ்த்து

2019ம் ஆண்டின் உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதற்கு வாழ்த்துகள். திறமை, மனவலிமை, உடற்தகுதி ஆகியவற்றுடன் இணைந்து, ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தியிருக்கிறீர்கள். உங்களால் பெருமை அடைகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Story first published: Monday, August 26, 2019, 9:53 [IST]
Other articles published on Aug 26, 2019
English summary
President ramnath govind, prime minister modi wishes p.v. sindhu.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X