For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தோனேசியா பாட்மின்டன்..வாக்குவாதம் செய்தும் வெளியேறிய ஸ்ரீகாந்த், செமி பைனலுக்குள் நுழைந்த சாய்னா

ஜகார்த்தா:இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் மாஸ்ட்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேஹ்வால் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆனால்.. ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்த் காலிறுதியில் தோற்று வெளியேறினார்.

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டி நடைபெற்று வருகிறது. காலிறுதி போட்டியில் சாய்னா நேஹ்வால் தாய்லாந்தின் சோச்சுவாங்கை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை சாய்னா வெகு எளிதாக தம்வசமாக்கி கொண்டார்.

Saina nehwal reaches semis, kidambi srikanth crash out in indonesia masters badminton

இதையடுத்து, 2வது சுற்றில் அனல் பறந்தது. முதல் செட்டை இழந்த சோச்சுவாங், அதிரடியாக விளையாட தொடங்கினார். அவருக்கு ஈடுகொடுத்து சாய்னாவும் ஆடியதால் யாருக்கு 2வது செட் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

முடிவில் 21க்கு 18 என்ற செட் கணக்கில் 2வது செட்டையும் கைப்பற்றி, சாய்னா அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் அவர், சீனாவின் ஹிபிங்ஜாவோவை எதிர்கொள்கிறார்.

ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டியுடன் மோதினார். பரபரப்பான போட்டியில் முதல் செட்டை 18க்கு 21 என்ற கணக்கில் இழந்தார்.

2வது செட்டை எப்படியும் கைப்பற்றிவிடுவார் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 19ம் 21 என்ற புள்ளி கணக்கில் அந்த செட்டையும் இழந்தார். இதன் மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை ஸ்ரீகாந்த் தவற விட்டார். saina

போட்டியின் போது, பலமுறை ஆட்டத்தின் நடுவரிடம் சென்று ஸ்ரீகாந்த் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேட்ச் பாயிண்டின் போதும்... நடுவரிடம் மேல் முறையீடு செய்ய.. அதற்கான நேரம் கடந்துவிட்டதாக கூறி அதை நிராகரித்தார்.

Story first published: Friday, January 25, 2019, 17:18 [IST]
Other articles published on Jan 25, 2019
English summary
Saina Nehwal hardly broke a sweat on way to her second consecutive semi-final of the season but Kidambi Srikanth made an exit after losing his quarter-final match at Indonesia Masters badminton tournament in Jakarta
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X