பட்டத்தை போராடி இழந்தார் சிந்து…. வெள்ளியோடு ஆறுதல்

By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: இந்திய ஓபன் பாட்மின்டன் போட்டியில் பட்டத்தை தக்க வைக்கும் வாய்ப்பை நடப்பு சாம்பியன் பிவி சிந்து இழந்தார். வெள்ளிப் பதக்கத்துடன் அவர் ஆறுதல் அடைந்தார்.

இந்தியன் ஓபன் பாட்மின்டன் போட்டிகள் டெல்லியில் நடந்தது. இதில் முன்னாள் சாம்பியன் சாய்னா நெஹ்வால், எச்.எஸ். பிரனாய், முன்னாள் சாம்பியன் கிடாம்பி ஸ்ரீகாந்த், கஷ்யப், பி. சாய் பிரனீத், சமீர் வர்மா என முன்னணி வீரர்கள் அனைவரும் தோல்வியடைந்து வெளியேற ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக பிவி சிந்து பைனல் வரை முன்னேறினார்.

Sindhu lost in finals

நடப்பு சாம்பியனான சிந்து, அமெரிக்காவின் பீவென் ஜாங்க் உடன் நேற்று இரவு நடந்த பைனலில் மோதினார். தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறிய சிந்து பட்டத்தை தக்க வைப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தர வரிசையில் 5வது இடத்தில் உள்ள ஜாங்க் கடினமாக மோதி அபார வெற்றி பெற்றார். முதல் செட்டில் ஜாங்க் 21-18 என்ற கணக்கில் வென்றார். அடுத்த செட்டை 21-18 என சிந்து வென்றார். சமநிலையில் இருவரும் கடுமையாக போராடினர். கடைசி செட்டை 22-20 என்ற கணக்கில் அமெரிக்க வீராங்கனை வென்றார்.

அதையடுத்து இரண்டாவது இடத்தைப் பிடித்த சிந்து, வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.

ஆடவர் பிரிவு பைனலில் சீனாவின் ஷி யூகி, 21-18, 21-14 என்ற செட்களில் தைபேயின் சோ டியான் சென்னை வென்றார்.

ஆடவர் இரட்டையரில் இந்தோனேஷியாவின் மார்கஸ் ஜிடியான், கெவின் சஞ்சயா ஜோடியும், மகளிர் இரட்டையரில் இந்தோனேஷியாவின் கிரேசியா போலி, அப்ரியானி ரகாயு ஜோடியும், கலப்பு இரட்டையரில் டேனஸ் மதியாஸ் கிறிஸ்டியான் சென், கிறிஸ்டினா பெடர்சன் ஜோடியும் பட்டம் வென்றன.

Story first published: Monday, February 5, 2018, 12:35 [IST]
Other articles published on Feb 5, 2018
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற