மேரி கோம், சீமாவுக்கு வெள்ளி… மகளிர் பிரிவில் 6 பதக்கம்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

சோபியா: பல்கேரியாவில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம் மற்றும் சீமா புனியா வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

ஐரோப்பிய குத்துச்சண்டை போட்டியான, 69வது ஸ்டார்ன்ட்ஜா நினைவு குத்துச்சண்டை போட்டி பல்கேரியாவின் சோபியா நகரில் நடந்து வருகிறது.

Kom settles for Silver

இதில், மகளிர் 48 கிலோ எடைப் பிரிவின் பைனலுக்கு இந்தியாவின் மேரி கோம் தகுதி பெற்றுள்ளார். ஐந்து முறை உலகச் சாம்பியனான மேரி கோம், ஆசிய சாம்பியன்ஷிப்பில் மற்றும் கடந்த மாதம் நடந்த இந்திய ஓபனில் தங்கம் வென்றார்.

பல்கேரிய போட்டியில் ஹாட்ரிக் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று இரவு நடந்த பைனலில் பல்கேரியாவின் ஸ்வேடா அசிமோவாவிடம் போராடி தோல்வி அடைந்தார். அதையடுத்து வெள்ளிப் பதக்கத்துடன் ஆறுதல் அடைந்தார்.

மகளிர் 81 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் சீமா புனியாவும் வெள்ளியுடன் திருப்தி அடைந்தார். ரஷியாவின் அன்னா இவனோவாவிடம் அவர் தோல்வியடைந்தார்.

எல். சரிதா தேவி, 60 கிலோ எடைப் பிரிவிலும், 81 கிலோ எடைப் பிரிவில் பாக்யபதி கசாரி, ஸ்வீட்டி போரா 75 கிலோ எடைப் பிரிவு, மீனா குமாரி தேவி 54 கிலோ எடைப் பிரிவிலும் வெண்கலம் வென்றனர்.

Story first published: Monday, February 26, 2018, 11:17 [IST]
Other articles published on Feb 26, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற