வயசாச்சா…. எனக்கா…. இந்திய ஓபன் பாக்சிங் பைனலில் மேரி கோம்

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: விளையாட்டுக்கு வயது ஒரு தடையேயில்லை என்பது மற்றொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. மூன்று குழந்தைகளின் தாயான, 35 வயதாகும் மேரி கோம், இந்திய ஓபன் பாக்சிங் பைனலுக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய ஓபன் பாக்சிங் போட்டிகள் டெல்லியில் நடக்கிறது. இதில் மகளிர் 48 கிலோ எடைப் பிரிவின் பைனலுக்கு, ஐந்து முறை உலக சாம்பியனான மேரி கோம் முன்னேறியுள்ளார்.

Mary in finals

நேற்று நடந்த அரை இறுதியில் மங்கோலியாவின் அல்தான்செட்செக் லுட்சாய்கானை வீழ்த்தினார் மேரி கோம். முதல் இரண்டு சுற்றுகளில் அனாயசியமாக புள்ளிகளைப் பெற்ற மேரிகோம், கடைசி சில நிமிடங்களில் சோர்ந்து காணப்பட்டார். ஆனாலும், அதையும் மீறி, அபார பஞ்ச் கொடுத்து வென்றார். ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மேரிகோம், பைனலில் பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜோசி கபுகோவை சந்திக்கிறார்.

ஆடவர் 60 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் முன்னணி வீரர் சிவ தாபா அதிர்ச்சி தோல்வியடைந்து, வெண்கலப் பதக்கத்தை பெற்றார். அதுபோல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மனோஜ் குமார், 69 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் தோல்வியடைந்தார்.

மகளிர் பிரிவில் எல் சரிதா தேவி, 60 கிலோ எடைப் பிரிவில் பிரியங்காவை வென்று பைனலுக்கு முன்னேறினார்.

Story first published: Thursday, February 1, 2018, 10:45 [IST]
Other articles published on Feb 1, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற