For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்டூவர்ட் பந்து வீச்சை "பின்னி" எடுத்த லூயிஸ்... இந்தியாவின் இதயத்தை உடைத்த அந்த 5 சிக்ஸர்கள்!

போர்ட் லாடர்டேல், புளோரிடா, அமெரிக்கா: ஒரே ஒரு ரன்னில் இந்தியா, தனது முதல் டி20 போட்டியை மேற்கு இந்தியத் தீவுகளிடம் இழந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தி விட்டது.

ஸ்டூவர்ட் பின்னியின் ஓவரில் மேற்கு இந்தியத் தீவுகளின் எவின் லூயிஸ் அடித்த 5 சிக்ஸர்கள்தான் இந்தியாவை தோல்விப் பாதைக்கு கொண்டு போய் விட்டு விட்டது. அதேசமயம், ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த யுவராஜ் சிங்கின் சாதனையை லூயிஸ் முறியடிக்கவில்லை.

ஆனால் என்ன, இந்தியாவின் வெற்றியை ஜஸ்ட் ஒரு ரன்னில் தொலைந்து போக வைத்து விட்டது லூயிஸின் அதிரடி பேயாட்டம்.

ஸ்டூவர்ட் பின்னி பந்து வீச்சு

ஸ்டூவர்ட் பின்னி பந்து வீச்சு

சமூக வலைதளங்களில் ஸ்டூவர்ட் பின்னியின் பந்து வீச்ச்சை ரசிகர்கள் நேற்று வசை பாடும் அளவுக்கு அவரை நையப்புடைத்து விட்டார் லூயிஸ். அதிரடியாக ஆடிய அவர் பின்னி பந்து வீச்சில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை விளாசினார்.

கடைசிப் பந்துக்கு சிங்கிள் மட்டுமே

கடைசிப் பந்துக்கு சிங்கிள் மட்டுமே

கடைசிப் பந்தையும் சிக்ஸருக்கு விரட்ட அவர் முயன்றார். ஆனால் போகவில்லை. ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதனால் லூயிஸ் ஏமாற்றமடைந்தார். பின்னி அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

2வது மேட்ச்தான் இது

2வது மேட்ச்தான் இது

இத்தனைக்கும் லூயிஸுக்கு இது 2வது டி20 போட்டிதான். காயமடைந்திருந்த கிறிஸ் கெய்லுக்குப் பதிலாக உள்ளே வந்தவர் இவர். வந்த வேகத்தில் வெளுத்துக் கட்டி விட்டார். 49 பந்துகளில் சதம், அதில் 5 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள் என பிரமிக்க வைத்து விட்டது லூயிஸின் அதிரடி ஆட்டம்.

முதல் போட்டியில் முட்டை போட்டவர்

முதல் போட்டியில் முட்டை போட்டவர்

லூயிஸ் உலகக் கோப்பை டி20 தொடரில் தான் அறிமுகமானார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் ஆடினார். அப்போட்டியில் 7 பந்துகளைச் சந்தித்த அவர் முட்டைதான் போட்டார்.

மொத்தத்தில் நேற்று லூயிஸ் ஓவர்நைட் ஹீரோவாகி விட்டார்!

Story first published: Sunday, August 28, 2016, 10:46 [IST]
Other articles published on Aug 28, 2016
English summary
West Indies' opener Evin Lewis came very close to equalling Indian batsman Yuvraj Singh's 6 sixes in an over record during the 1st Twenty20 International here today (August 27) at the Central Broward Regional Park Stadium Turf Ground.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X