விராத் கோஹ்லின்னா யாரு.. ஒரே ஒரு கேள்வி.. ஓவர் நைட்டில் ஸ்டாரான பாக். பெண்!

Posted By: Staff

டெல்லி: விராட் கோஹ்லி யார் என்ற கேட்ட பாகிஸ்தான் பெண்ணுக்கு அவருடைய நண்பர் அளித்த பதில், டுவிட்டரில் பலருடைய பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோஹ்லி, ஆசிரியர் தினத்தையொட்டி, டுவிட்டரில் ஒரு படத்தை வெளியிட்டார்.

அதில், சுவற்றில் கிரிக்கெட் பிரபலங்களின் பெயர்கள் உள்ளன. அதற்கு பக்கத்தில் கோஹ்லி உட்கார்ந்துள்ளார்.

கடவுளுக்கு நன்றி

சுவற்றின் அடியில், எப்படி இருக்க வேண்டும் என்று காட்டியதற்கு நன்றி என்று விராட் கூறியுள்ளார். கடவுள் சச்சின் டெண்டுல்கர், தல டோணியில் ஆரம்பிக்கிறது.

படு வேக ரீட்வீட்

படு வேக ரீட்வீட்

இதில், பாகி்ஸ்தான் முன்னாள் வீரர்கள் இம்ரான் கான், ஜாவித் மியான்தத், இன்சமாம் உல் ஹக் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

இந்த டுவிட், 8688 பேர் ரிடுவிட் செய்துள்ளனர், 61,631 பேர் லைக் செய்துள்ளனர். 2392 பேர் தங்களுடைய கருத்தை பதிவு செய்துள்ளனர்.

சையதாவுக்கு வந்த சந்தேகம்

டுவிட்டரில் இது எப்படியோ, ஒரு பாகிஸ்தான் பெண்ணான சையதா அலியா அகமதுவுக்கும் சென்றுள்ளது. அவர் அதை தனது நண்பருக்கு அனுப்பி, இந்த படத்தில் உள்ளது யார் என்று கேட்டுள்ளார். இதில், விராட் கோஹ்லியையும் டேக் செய்துள்ளார்.

இவர்தான் கோஹ்லி

அதற்கு அவருடைய நண்பர், இவர்தான் விராட் கோஹ்லி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன், தற்போதுள்ள பேட்ஸ்மேன்களில் மிகச் சிறந்தவர். அவருக்கு பின்னால் சுவற்றில் இருக்கும் பெயர்கள், புகழ்பெற்ற கிரிக்கெட் வீர்ரகள் என்று பதிலளித்துள்ளார். கோஹ்லியின் டுவிட்டைவிட, தற்போது இந்த டுவிட்தான் மிகவும் பிரபலமாகி உள்ளது.

எதிர்பார்க்கவே இல்லை

எதிர்பார்க்கவே இல்லை

தனது சாதாரண விசாரணை டிவீட் இந்த அளவுக்கு வைரலாகும் என்றும் தான் ஓவர்நைட்டில் நட்சத்திரமாவேன் என்றும் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று சையதா ஆச்சரியப்பட்டு இன்னொரு டிவீட் போட்டுள்ளார்.

Story first published: Monday, September 11, 2017, 8:57 [IST]
Other articles published on Sep 11, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற