For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

34 வருடங்களாக முறியடிக்க முடியாத சாதனை... 2வது டெஸ்டில் முறியடித்த கோலி தலைமையிலான இந்திய அணி

சென்னை: இங்கிலாந்துக்கு எதிராக அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி வரலாற்று சாதனையை செய்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடர் 1 -1 என சமநிலையில் உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக பெற்ற வெற்றி மூலம் 34 வருடமாக முறியடிக்க முடியாமல் இருந்த சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.

 அழுத்தம்

அழுத்தம்

முதல் டெஸ்டில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதால் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் இணையத்தில் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனால் 2வது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலுக்கு இந்திய அணியும் கோலியும் தள்ளப்பட்டனர்.

பதிலடி

பதிலடி

முதல் போட்டிக்கு பதிலடி தர 2வது டெஸ்டின் தொடக்கம் முதலே இந்திய அணி ஆக்ரோஷமாக ஆடி வந்தது. இதனால் இங்கிலாந்து அணியை 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டுகள் மற்றும் 2வது இன்னிங்சில் சதமடித்த அஸ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

வரலாற்று சாதனை

வரலாற்று சாதனை

கடந்த 1988ம் ஆண்டு இங்கிலாந்தை 279 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியிருந்ததே பெரிய வெற்றியாக இருந்தது. இந்நிலையில் தற்போது 317 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 34 வருட சாதனையை கோலியின் தலைமையிலான இந்திய அணி செய்துள்ளது.

அடுத்த டெஸ்ட்

அடுத்த டெஸ்ட்

இரு அணிகளும் மோதும் 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இது பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறவிருக்கிறது. தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் இப்போட்டி குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

Story first published: Tuesday, February 16, 2021, 18:22 [IST]
Other articles published on Feb 16, 2021
English summary
Team India break 34-year old record against England in 2nd Test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X