For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒன்றரை நாளில் முடிந்த டெஸ்ட் மேட்ச்.. 34 விக்கெட்டுகள் கொத்தாக விழுந்தது.. Aus vs SA முதல் டெஸ்ட்

பிரிஸ்பேன் : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைக்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய அணி, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளத்தை அமைத்தது.

பச்சை போர்வையை போர்த்தியது போல் ஆடுகளத்தில் புற்கள் இருந்தது. மைதானத்தில் ஆடுகளை மேய விட்டு இருந்தால், அது ஒரு வாரத்திற்கு பசி எடுக்காமல் இருந்திருக்கும். அந்த அளவிற்கு புற்கள் இருந்தது.

அறிமுகமே அசத்தல்.. டெஸ்ட் வருகையை பிரம்மாண்டமாக அறிவித்த வங்கதேச வீரர்.. யார் இந்த ஜாகிர் ஹசன்? அறிமுகமே அசத்தல்.. டெஸ்ட் வருகையை பிரம்மாண்டமாக அறிவித்த வங்கதேச வீரர்.. யார் இந்த ஜாகிர் ஹசன்?

அனல் பறந்தது

அனல் பறந்தது

டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த ஆஸ்திரேலிய வீரர்கள், அனல் பறக்க பந்தகளை வீசி தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி அளித்தார்கள். டீன் எல்கார் 3 ரன்களிலும் , சாரல் எர்வி 10 ரன்களிலும், வெண்டர் டுசன் 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பெவுமா போராடி 38 ரன்கள் சேர்க்க, அதிரடியாக விளையாடிய வெர்ரையின் 64 ரன்கள் சேர்த்தார்.

டிராவிஸ் ஹேட் 92

டிராவிஸ் ஹேட் 92

இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 152 ரன்கள் ரன்களில் சுருண்டது. இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் முதலில் கொத்தாக விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும் டிராவிஸ் ஹேட் அதிரடியாக விளையாடி 92 ரன்கள் சேர்க்க, மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

 99 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

99 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இதனால் ஆஸதிரேலிய அணி முதல் இன்னிங்சில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 66 ரன்கள் பின்தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி, மீண்டும் 2வது இன்னிங்சில் பேட்டிங்கில் ரன் சேர்க்க தடுமாறியது. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் துல்லியமான பந்துவீச்சால், தென்னாப்பிரிக்க விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் சரிந்தது.

34 விக்கெட்டுகள்

34 விக்கெட்டுகள்

சோண்டோ அதிகபட்சமாக 36 ரன்கள் சேர்க்க தென்னாப்பிரிக்க அணி 99 ரன்களில் சுருண்டது. இதனையடுத்து 34 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியும் பேட்டிங்கில் தடுமாறியது. உஸ்மான் கவாஜா 2 ரன்களிலும், வார்னர் 3 ரன்களிலும், ஸ்மித் 6 ரன்களலும், டிராவிஸ் ஹேட் டக் அவுட்டாகியும் வெளியேற, ஆஸ்திரேலிய அணி வெற்றி இலக்கை எட்டுவதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதன் மூலம் ஒன்றரை நாட்களுக்குள் போட்டி முடிந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Sunday, December 18, 2022, 14:08 [IST]
Other articles published on Dec 18, 2022
English summary
34 Wickets fall inside two days of the gabba test and australia managed to win ஒன்றரை நாளில் முடிந்த டெஸ்ட் மேட்ச்.. 34 விக்கெட்டுகள் கொத்தாக விழுந்தது.. Aus vs SA முதல் டெஸ்ட்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X