For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிராஜ்க்கு முன்பு நம்பர் 1 இடத்தை பிடித்த இந்திய பவுலர்கள் யார் தெரியுமா? எல்லாமே ஜாம்பவான்கள் தான்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தற்போது ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். முஹம்மது சிராஜ் கடைசியாக விளையாடிய 8 ஒரு நாள் போட்டிகளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

குறிப்பாக இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 32 ரன்களை விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தனது சொந்த மண்ணில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் விழித்திருக்கிறார்.

இதன் மூலம் அவர் ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். 2019 ஆம் ஆண்டு தனது முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய முகமது சிராஜ் 10 ஓவர் வீசி 76 ரன்கள் வாரி வழங்கினார்.

முகமது சிராஜை ஏமாற்றுகிறாரா ரோகித்.. நன்றாக ஆடியும் அங்கீகாரம் இல்லை.. மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு முகமது சிராஜை ஏமாற்றுகிறாரா ரோகித்.. நன்றாக ஆடியும் அங்கீகாரம் இல்லை.. மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு

சிராஜின் கம்பேக்

சிராஜின் கம்பேக்

இதனை அடுத்து மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிராஜ் திரும்பினார் . இதில் 2022 ஆம் ஆண்டு மட்டும் முகமது சிராஜ் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி அமர்க்களப்படுத்தி இருக்கிறார். முகமது சிராஜ்க்கு முன்பு இதுவரை 5 இந்திய பந்துவீச்சாளர்கள் ஒருநாள் போட்டி தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம்.

மனிந்தர் சிங்

மனிந்தர் சிங்

ஐசிசி ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை மனிந்தர் சிங் பெற்றுள்ளார். இவர் 59 ஒரு நாள் போட்டியில் விளையாடிய 66 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 1987 ஆம் ஆண்டு மட்டும் ஒரு நாள் போட்டியில் 30 விக்கெட்களை மனிந்தர் சிங் வீழ்த்தியதன் மூலம் தரவரிசை பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்தார்.

கபில்தேவ்

கபில்தேவ்

இதனை அடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 1988 ஆம் ஆண்டு ஒரு நாள் போட்டியில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தார். அந்த காலத்தில் இந்தியா சுழற் பந்துவீச்சையை நம்பிக்கொண்டிருந்த நிலையில் கபில்தேவ் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றார்.

அனில் கும்ப்ளே

அனில் கும்ப்ளே

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே. 1996 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அனில் கும்பலை தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடம் பிடித்தார். 96 ஆம் ஆண்டு மட்டும் அணில் கும்ப்ளே 61 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். தற்போது வரை ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா

ரவீந்திர ஜடேஜா

இந்த பட்டியலில் 4வது இடத்தை பிடித்திருப்பவர் ரவீந்திர ஜடேஜா. ஆகஸ்ட் மாதம் 2013 ஆம் ஆண்டு நம்பர் ஒன் பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். அந்த ஆண்டில் மட்டும் ஜடஜா 52 ஒரு நாள் விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 12 விக்கெட்டுகளை ஜடேஜா வீழ்த்தினார்.

பும்ரா

பும்ரா

இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் பும்ரா. 2018 ஆம் ஆண்டு தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பும்ரா பெற்றார். அப்போது நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பும்ரா இரண்டு போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் சிறந்த பந்துவீச்சாக 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா அசத்தி இருந்தார். இதுவரை 72 ஒருநாள் போட்டிகள் விளையாடி 121 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருக்கிறார்.

Story first published: Thursday, January 26, 2023, 18:48 [IST]
Other articles published on Jan 26, 2023
English summary
5 Indian Bowlers who crowned no 1 in icc odi rankings before siraj
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X