புரிஞ்சிக்கிட்டீங்களா? இந்த 5 காரணம் தான்.. உங்களுக்கு ஐபிஎல் கோப்பை கிடைக்காம போனதுக்கு..!!

மும்பை:பெங்களூர் அணி இன்னும் கோப்பையை வெல்லாமல் இருக்க 5 காரணங்கள் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 11 சீசன் முடிவடைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் முக்கியமான வீரர்கள் விளையாடினாலும் அந்த அணியால் வெற்றி மகுடம் சூட்ட முடியவில்லை.

இந்திய அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி, 2013-ல் இருந்து அந்த அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். கோப்பையை பெற்றுக் கொடுக்காவிடிலும் தொடர்ந்து கோலியை அந்த அணி கேப்டனாக வைத்து வருகிறது.

இந் நிலையில் அந்த அணியின் இந்த தோல்விக்கு 5 காரணங்கள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். அவை என்னவென்று தற்போது பார்க்கலாம்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை பிளே-ஆஃப் சென்ற அணிகளின் பட்டியல்.. முதல் இடம் யாருக்குன்னு தெரியுமா?

தலைமை இல்லாதது

தலைமை இல்லாதது

பெங்களூர் அணியில் 2008ம் ஆண்டில் இருந்தே சரியான தலைமை இருந்ததில்லை. டேனியல் வெட்டோரியை தொடர்ந்து சில பார்ட் டைம் கேப்டன்கள் இருந்தாலும, கோலி அந்த அணிக்கு பல வருடங்களாக கேப்டனாக இருந்து வருகிறார்.

சரியான முடிவு

சரியான முடிவு

அவர் சரியான நேரங்களில் சரியான முடிவுகளை எடுப்பதில்லை. பல போட்டிகளை கோட்டை விட்டுள்ளார். அதனால் அந்த அணி இன்னும் கோப்பையை வென்றது இல்லை.

வீரர்கள் பயன்பாடு

வீரர்கள் பயன்பாடு

திறமையான வீரர்களை அந்த அணி சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. ராகுல், கெய்ல், பிரெண்டம் மெக்கல்லம் என பலர் இருந்தும் அவர்களை பெங்களூர் அணியால் சரியாக பயன்படுத்த முடியவில்லை.

பந்துவீச்சு இல்லாதது

பந்துவீச்சு இல்லாதது

ஒவ்வொரு வருடமும் சரியான பந்துவீச்சு என்பது கிடையாது. பேட்ஸ்மேன்கள் எண்ணிக்கை தாராளமாக உள்ளது. ஆனால்.. பந்துவீச்சிலோ சொதப்பலோ... சொதப்பல் தான்.

முக்கிய குறை

முக்கிய குறை

அந்த அணியில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க சரியான பினிஷர் இல்லை. சென்னைக்கு ஒரு தோனி, மும்பைக்கு ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட், கொல்கத்தாவிற்கு ரசல் ஆகியோர் போல பெங்களூர் அணியில் ஒருவர் கூட இல்லை.

சரியாக இல்லாத கோச்

சரியாக இல்லாத கோச்

இதேபோன்று... அந்த அணிக்கு என்று சரியான நிலையில் கோச் இல்லாதது. சென்னைக்கு ஒரு பிளமிங், மும்பைக்கு சச்சின், கும்ப்ளே ஜான்டி ரோட்ஸ் ஆகியோரைப் போன்று பெங்களூர் அணிக்கு யாரும் இன்னும் கிடைக்கவில்லை. இது அந்த அணியின் வெற்றியை கடுமையாக பாதித்திருக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
5 reasons Why Royal Challengers Bangalore have never been champions in IPL series.
Story first published: Wednesday, March 20, 2019, 17:59 [IST]
Other articles published on Mar 20, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X