600 கேட்ச்கள் பிடித்து சாதனை…. தல டோணிக்கு பெரிய விசில் போடுங்க

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN
600 கேட்ச் பிடித்து உலக சாதனை படைத்த தல தோனி- வீடியோ

டெல்லி: டெஸ்ட், ஒருதினப் போட்டி, டி-20 என அனைத்திலும் சேர்த்து, 600 கேட்ச்களைப் பிடித்த மூன்றாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை, தல மகேந்திர சிங் டோணி புரிந்துள்ளார்.

இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. ஒருதினப் போட்டித் தொடரின், மூன்றாவது ஆட்டத்தின்போது, ஒருதினப் போட்டியில், 400வது விக்கெட்டை வீழ்த்திய, முதல் இந்திய விக்கெட் கீப்பர், உலக அளவில் 4வது விக்கெட் கீப்பர் என்ற சாதனை கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி படைத்தார்.

600 Catches For Dhoni

இந்த நிலையில், 6வது ஒருதினப் போட்டியின்போது, அனைத்து வகை கிரிக்கெட்களிலும் 600 கேட்ச்களைப் பிடித்த மூன்றாவது விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பத்மபூஷண் டோணி புரிந்தார்.

இதுவரை டோணி, டெஸ்ட் போட்டிகளில் 256 கேட்ச்களையும், ஒருதினப் போட்டிகளில் 297 கேட்ச்களையும், டி-20ல் 47 கேட்ச்களையும் பிடித்துள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பவுச்சர் 952 கேட்ச்கள், 46 ஸ்டம்பிங் என, 998 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட், 813 கேட்ச்கள், 92 ஸ்டம்பிங் என 905 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டோணி 600 கேட்ச்கள், 174 ஸ்டம்பிங் என, 774 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

இந்த நிலையில், நேற்று நடந்த முதல் டி-20 போட்டியின்போது ஒரு கேட்ச் பிடித்து, கேட்ச்களின் எண்ணிக்கையை 601ஆக உயர்த்திக் கொண்டார். ஸ்டம்பிங் கிங்கான டோணி மட்டுமே, 100க்கும் மேற்பட்ட ஸ்டம்பிங் செய்துள்ளார்.

Story first published: Monday, February 19, 2018, 10:58 [IST]
Other articles published on Feb 19, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற