ஓ மை காட்.. பேட்ஸ்மேன் வேகமாக அடித்த பந்து பவுலர் மண்டையில் பட்டு சிக்ஸ் பறந்தது!

Posted By:
பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலர் தலையில் பட்டு சிக்ஸ் பறந்தது!- வீடியோ

வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டில் நடந்த கிரிக்கெட் போட்டி ஒன்றில் பேட்ஸ்மேன் வேகமாக அடித்த பந்து பவுலர் மண்டையில் பட்டு சிக்ஸ் பறந்து இருக்கிறது. பவுலர் சில நிமிடம் இதனால் நிலை தடுமாறி போனார்.

பொதுவாக பந்து பவுன்சராக வந்து பேட்ஸ்மேன்கள் தலையில் படுவதே வழக்கம். இந்த அசம்பாவிதங்களில் சமயங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தற்போது நியூசிலாந்து இந்த வித்தியாசமான சம்பவம் நடந்து இருக்கிறது. அங்கு இருந்த அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

 என்ன விளையாட்டு

என்ன விளையாட்டு

ஃபோர்ட் டிராபிக்கான என்று பெயரில் தற்போது அங்கு 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த போட்டியில் பவுலிங் அணிக்காக விளையாடிய எல்லிஸ் தலையில்தான் மோசமாக காயம் ஏற்பட்டு இருக்கிறது.

அடுத்தடுத்த சிக்ஸ்

எல்லிஸ் வீசிய பந்தில் பேட்ஸ்மேன் ஜீத் ராவல் சிக்ஸ் அடித்துள்ளார். இதையடுத்து அடுத்த பாலிலும் சிக்ஸ் அடிக்க முயற்சித்துள்ளார். அந்த பந்து பவுலர் தலையில்பட்டு வேகமாக சிக்ஸ் பறந்து இருக்கிறது.

 தடுமாறினார்

தடுமாறினார்

முதலில் இதற்கு பவுண்டரி கொடுக்கப்பட்டது. ஆனால் கடைசியில் சிக்ஸ் மாற்றப்பட்டது. அதே சமயம் பவுலர் இதனால் மோசமாக நிலை தடுமாறினார். பேட்ஸ்மேன் பதறிப்போய் அவரிடம் விசாரித்தார்.

 என்ன ஆனது

என்ன ஆனது

உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதன்படி அவருக்கு எந்த விதமான பிரச்சனையும் ஏற்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் போட்டியில் இருந்து ஒய்வு பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

Story first published: Thursday, February 22, 2018, 13:20 [IST]
Other articles published on Feb 22, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற