இரண்டு கைகளாலும் பந்து வீசிய கர்னேவர்

Posted By: Staff

சென்னை: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நேற்று இரவு நடந்த பயிற்சி ஆட்டத்தில், இந்திய கிரிக்கெட் வாரிய அணியை வென்றது. ஆனால், இந்தப் போட்டி, இந்தியாவுக்கு ஒரு புதிய ஆல்-ரவுண்டர் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம் விதர்பாவைச் சேர்ந்த, 24 வயதாகும் அக் ஷய் கர்னேவர், மிகச் சிறப்பாக பந்து வீசியதுடன், கடைசி நேரத்தில், 40 ரன்கள் எடுத்து, அணிக்கு சற்று கவுரவத்தையும் கொடுத்தார்.

a rare talent in Karnewar

அதைவிட இவரிடம் உள்ள ஒரு சிறப்பு, இரண்டு கைகளாலும் பந்து வீசும் திறமையுள்ளவர். நேற்று பவுலிங் செய்தபோதும், ஒரே ஓவரில், இரண்டு கைகளாலும் மாறி மாறி அவர் பந்து வீசியது, ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.

ஆம்பிடெக்ஸ்ட்ரஸ் எனப்படும், இரண்டு கைகளிலும் ஒரே திறனுள்ள வேலை செய்வது மிகவும் அரிதான ஒன்றாகும். அதிலும் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

முதலில் ஆப் ஸ்பின்னராகவே இருந்தார். அப்போது அவருடைய கோச், இடது கை ஸ்பின்னர்களுக்கு பற்றாக்குறை உள்ளதால், அதை முயற்சி செய்யும்படி கூறியுள்ளார்.

இயற்கையாகவே, இரண்டு கைகளையும் பயன்படுத்தக் கூடிய கர்னேவர், இடது கை சுழற்பந்து வீச்சில் பயிற்சி மேற்கொள்ளத் துவங்கினார். அதன்பிறகு, இரண்டு கைகளிலும் பந்து வீசும் திறமையை வளர்த்திக் கொண்டார்.

கடந்த ஆண்டு, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். இதுவரை, 17 முதல்தர போட்டிகளில், 34 விக்கெட்களையும், 13 டி-20 போட்டிகளில், 10 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளார்.

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரும் இரண்டு கைகளும் பயன்படுத்தும் திறனுள்ளவர். நெட்ஸ் பயிற்சியின்போது, இடது கைகளாலும் விளையாடுவார்.

தென்னாப்பிரிக்காவின் ராபின் பீட்டர்சன், பீல்டிங்கில், இரண்டு கைகளாலும், பந்தை எறிவார். இலங்கையின் ஹசன் திலகரத்னே, 1996 உலகக் கோப்பை போட்டியில், கென்யாவுக்கு எதிராக இரண்டு கைகளாலும் பந்து வீசினார்.

ஆனால், கர்னேவர், இரண்டு கைகளிலும் ஒரே திறனுள்ள அளவுக்கு பந்து வீசக் கூடியவர். அவருடைய திறமை தற்போது வெளி உலகுக்கு தெரியவந்துள்ளது. ஆல் த பெஸ்ட்!

Story first published: Wednesday, September 13, 2017, 19:01 [IST]
Other articles published on Sep 13, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற