For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானை 137 ரன்களில் சுருட்டியது எப்படி ? ரகசியத்தை கூறிய ஆதில் ரஷித்.. அசத்தலான கேட்ச்

மெல்போர்ன் : டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 138 ரன்களை இலக்காக பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர், முதலில் பந்து வீசுவதாக கூறினார்.

மெல்போர்ன் நகரம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் பந்து வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவை அவர் எடுத்ததாக கூறினார்.

இங்கிலாந்தின் அசுர வேட்டை.. திருப்புமுணை தந்த பாபர் அசாமின் விக்கெட்.. வெற்றி பெற 138 ரன்கள் இலக்கு! இங்கிலாந்தின் அசுர வேட்டை.. திருப்புமுணை தந்த பாபர் அசாமின் விக்கெட்.. வெற்றி பெற 138 ரன்கள் இலக்கு!

கடும் நெருக்கடி

கடும் நெருக்கடி

பாகிஸ்தான் அணி போட்டி தொடங்கியதில் இருந்து ரன்களை குவிக்க கடுமையாக தடுமாறியது. பாகிஸ்தான் அடித்த பந்துகள் எல்லாம் இங்கிலாந்து ஃபில்டர்களை நோக்கி கேட்ச் ஆனது. குறிப்பாக இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஆதில் ரசித், சாம் கரன் ஆகியோர் அபாரமாக பந்துவீசி நெருக்கடி அளித்தனர்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

இந்த நிலையில் இங்கிலாந்தின் செயல்பாடு குறித்து பேசிய ஆதில் ரசித், இது இங்கிலாந்து அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று கூறினார். நாங்கள் எங்களுடைய பணியை சரியாக செய்திருக்கிறோம் என நினைக்கிறேன். ஆடுகளம் எப்படி இருக்கிறது என்பதை முன் கூட்டியே ஆய்வு செய்து அதற்கு ஏற்ப நாங்கள் பந்துகளை வீசினோம்.

என்னுடைய பலம்

என்னுடைய பலம்

நான் பந்துகளை மெதுவாக வீசினேன். அதுதான் என்னுடைய பலம். பந்துகளை மெதுவாக வீசும் போது விக்கெட்டுகள் கிடைக்கின்றன. மைதானத்தில் பவுண்டரி எல்லை மிகவும் பெரியதாக இருந்தது. அதனால் அந்த இடத்தில் பேட்ஸ்மேன்கள் அடிக்கும் வகையில் பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினேன்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

137 ரன்களில் பாகிஸ்தானை நாங்கள் சுருட்டியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய பேட்ஸ்மேன்களும் இந்த ரன்களை எட்டு வார்கள் என நினைக்கிறேன் என்று கூறினார். இங்கிலாந்தின் பந்துவீச்சில் கடைசி ஐந்து ஓவரில் 31 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது.

Story first published: Sunday, November 13, 2022, 15:55 [IST]
Other articles published on Nov 13, 2022
English summary
Adil Rashid reveals the secret of his bowling performance in final பாகிஸ்தானை 137 ரன்களில் சுருட்டியது எப்படி ? ரகசியத்தை கூறிய ஆதில் ரஷித்.. அசத்தலான கேட்ச்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X