For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு எதிராக அறிமுக டெஸ்ட்... பவுலர்கள் படையுடன் வருகிறது ஆப்கானிஸ்தான்!

டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக அறிமுகமாகிறது. இதற்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆப்கான் அணி அறிவிப்பு

டெல்லி: டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகும் ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியில் மிகவும் வலுவான பந்து வீச்சாளர்களுடன் ஆப்கானிஸ்தான் களமிறங்க உள்ளது.

இந்தியா உள்பட 10 நாடுகள், டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் நாடுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் அயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் டெஸ்ட் போட்டி அந்தஸ்தை பெற்றுள்ளன. அயர்லாந்து அணி தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடியது.

Afghanistan announced team for the test debut

ஆப்கானிஸ்தான் அணி, ஜூன் 14ல் பெங்களூருவில் நடக்கும் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 16 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. அதில் 5 ஸ்பின்னர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் என, மிகவும் வலுவான பவுலிங் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்கார் ஸ்டானிக்சாய் தலைமையிலான அணியில், முகமது நபி, ரஷீத் கான், முஜீபுர் ரஹ்மான், ஜாகிர் கான், ஹம்சா ஹோடக் ஆகிய ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ரஷீத் கான் ஐபிஎல்லில் ஹைதராபாத் அணிக்காக 17 ஆட்டங்களில் 21 விக்கெட்களை வீழ்த்தினார். முஜீபுர் ரஹ்மான் பஞ்சாப் அணிக்காக விளையாடிய 11 ஆட்டங்களில் 14 விக்கெட்களை வீழ்த்தினார். சின்னமன் பந்துவீச்சாளரான ஜாகிர் ரான், ராஜஸ்தான் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், காயம் காரணமாக விளையாடவில்லை.

காயம் காரணமாக தவ்லத் ஜாட்ரன் விலகினார். அதையடுத்து 18 வயதாகும் வேகப்பந்து வீச்சாளர் வபாதார் மொமந்த் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெற்றுள்ளார். சையத் ஷேர்ஷாத், யாமின் அஹ்மத்சாய் ஆகிய பந்துவீச்சாளர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். இதைத் தவிர டேராடூனில், ஜூன் 3ம் தேதி துவங்கும் வங்கதேசத்துக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகளுக்கான ஆப்கானிஸ்தான் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான ஆப்கானிஸ்தான் அணி:

அஸ்கார் ஸ்டானிக்சாய் (கேப்டன்), முகமது ஷாஷத், ஜாவேத் அஹ்மதி, இன்சாலுல்லா ஜன்னத், ரஹ்மத் ஷா, நாசிர் ஜமால், ஹஸ்மத்துல்லா ஷாகிதி, அப்சார் ஜைஜாய், முகமது நபி, ரஷீத் கான், ஜாகிர் கான், ஹம்சா ஹோடக், சையத் அகமது ஷேர்ஷாத், யாமின் அஹ்மத்சாய், வபாதார் மொமந்த், முஜீபுர் ரஹ்மான்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி:

அஜங்யா ரஹானே (கேப்டன்), ஷிகார் தவான், முரளி விஜய், கேஎல் ராகுல், சத்தேஸ்வர் புஜாரா, கருண் நாயர், விருத்தமான் சாகா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, ஹார்திக் பாண்டயா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாக்குர்.

Story first published: Wednesday, May 30, 2018, 14:56 [IST]
Other articles published on May 30, 2018
English summary
Indian team for the afghanistan test match has been announced.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X