தோனி, சங்ககராவுக்கு கூட பட்டியலில் இடம் இல்லை.. ஜாம்பவான்களுடன் இணைந்த பண்ட் மிரட்டும் புள்ளி விவரம்

சென்னை: சரிவர ஆட மாட்டார் என கடும் விமர்சனத்துக்கு ஆளான ரிஷப் பண்ட் அனைவரும் வாய்ப்பிளக்கும் அளவுக்கு புள்ளி விவரங்களை ஏற்படுத்தியுள்ளார்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டின் கீப்பிங் திறமை விவாதத்திற்கு உள்ளாகியிருந்தது. முக்கிய கேட்ச்சுகளை அவர் தவறவிடுவதால் அவர் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பலம்வாய்ந்த அணிகளுடன் விளையாடவேண்டுமா என கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு தனது காட்டடி மூலம் பதிலளித்து வருகிறார் ரிஷப் பண்ட். அவரின் சமீபத்திய புள்ளி விவரங்கள் விமர்சனம் செய்தவர்களை வாய்ப்பிளக்க செய்துள்ளது.

3 முக்கிய போட்டி

3 முக்கிய போட்டி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடிய 3வது டெஸ்ட் போட்டியில் 97 ரன்கள் அடித்தார். அதன் பின்னர் 4வது மற்றும் கடைசி போட்டியில் 89 ரன்கள் அடித்து வரலாற்று வெற்றிக்கு உதவினார். ஆஸ்திரேலியாவில் காட்டிய அதிரடியை சென்னை டெஸ்டிலும் பண்ட் தொடர்ந்து வருகிறார். முதல் டெஸ்டில் இந்திய அணி திணறிய நிலையில் 91 ரன்களை விளாசி அனைவரையும் வியக்க செய்தார்.

ஜாம்பவான்களுடன் சேர்ந்த பண்ட்

ஜாம்பவான்களுடன் சேர்ந்த பண்ட்

குறைந்த பட்சம் 1000 ரன்கள் எடுத்து அதிக ரன்ரேட் வைத்துள்ள விக்கெட் கீப்பர்களின் பட்டியலில் ரிஷப் பண்ட் 4வது இடத்தை பிடித்துள்ளார். இதுவரை 17 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் 44.07 சராசரியுடன் 1190 ரன்கள் குவித்துள்ளார். இந்த பட்டியலில் ஏ.பி.டிவிலியர்ஸ், ஆண்டி ஃபளவர், ஆடம் கில்க்ரிஸ்ட் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பகிர்ந்துள்ளனர்.

காட்டடி

காட்டடி

2018ம் ஆண்டு இங்கிலாந்துடனான போட்டியில் ரிஷப் பண்ட் 114 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தார். மேற்கு இந்திய தீவுகளுடனான ராஜ்கோட் டெஸ்டில் 92 ரன்கள் எடுத்ததும் ரிஷப் பந்தின் திறமை வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 2019ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பண்ட் அடித்த 159 ரன்கள் எடுத்து எதிரணியினரை கதிகலங்க செய்தார்.

 வாயடைத்த விமர்சகர்கள்

வாயடைத்த விமர்சகர்கள்

டெஸ்ட் போட்டிகளை டி20 போட்டி போன்று அதிரடி காட்டி ஆடி வரும் ரிஷப் பண்ட் தற்போது ஃபுல் ஃபார்மில் உள்ளார் என்றே கூறலாம். இதனால்தான் சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் முன்னிலை வகித்த போதும் டிக்ளர் செய்ய மனம் வராமல் இருந்ததாக இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேட்ச் மிஸ்ஸிங்

கேட்ச் மிஸ்ஸிங்

பேட்டிங்கில் அதிரடி காட்டி வரும் பண்ட்டிடம் இன்னும் கீப்பிங்கில் சொதப்பல் உள்ளது என்றே கூறலாம். அதாவது சராசரியாக ஒரு போட்டிக்கு 0.86 என்ற புள்ளிக்கணக்கில் அவர் கேட்ச்சுகளை மிஸ் செய்கிறார். கடந்த 2018ம் ஆண்டு முதல் குறைந்தது 10 போட்டிகளில் விளையாடிய கீப்பர்களில் பண்ட்-ன் இந்த சாராசரி மிகவும் மோசமான பதிவாகும். எனினும் அவரின் பேட்டிங் திறமை இந்திய அணியில் அவருக்கான இடத்தை உறுதி செய்து வருகிறது என்றே கூறலாம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
All the criticism are evaporated... Rishab Pant Showing the master class performance
Story first published: Friday, February 12, 2021, 18:31 [IST]
Other articles published on Feb 12, 2021

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X