அடுத்தடுத்த 4 விக்கெட்டுகளை வீழ்த்திய டெல்லி பௌலர்... 38 வயசுலயும் ரோகித்துக்கு எதிரா சாதனை!

சென்னை : ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்துள்ளது.

இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பௌலர் சிறப்பான பந்து வீசி அதிரடி கிளப்பினார்.

அந்த ஒரு ஓவர்.. மொத்தமாக சரிந்த மும்பை.. என்ன ஆனது சாம்பியன்ஸ் அணிக்கு? - எதிர்பார்க்காத டிவிஸ்ட்

13வது போட்டி

13வது போட்டி

ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய 13வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்துள்ளது. தொடர்ந்து டெல்லி அணி தனது பேட்டிங்கை தொடர்ந்து வருகிறது.

திணறிய மும்பை அணி

திணறிய மும்பை அணி

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய மும்பை அணியின் வீரர்கள் டெல்லி கேபிடல்ஸ் பௌலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வீழ்ந்தனர். அதிகபட்சமாக ரோகித் சர்மா 44 ரன்களும் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகியோர் முறையே 24, 26 மற்றும் 23 ரன்களையும் எடுத்துள்ளனர்.

மிஸ்ரா 4 விக்கெட்டுகள்

மிஸ்ரா 4 விக்கெட்டுகள்

மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் வழக்கம் போல டெல்லி வீரர் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதேபோல ஸ்டாய்னஸ், ரபடா மற்றும் லலித் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஆனால் இன்றைய போட்டியின் பௌலிங் ஹீரோவாக செயல்பட்டார் அமித் மிஸ்ரா. அவர் இன்றைய போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிறப்பான மிஸ்ரா

சிறப்பான மிஸ்ரா

இன்றைய போட்டியில் கிறிஸ் வோக்சிற்கு பதிலாக அணியில் இணைக்கப்பட்டுள்ளார் அமித் மிஸ்ரா. 38 வயதான அமித் மிஸ்ரா இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், கீரன் பொல்லார்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளார்.

அதிகமுறை வீழ்த்திய மிஸ்ரா

அதிகமுறை வீழ்த்திய மிஸ்ரா

மேலும் அவர் இன்றைய போட்டியில் மற்றொரு சாதனையையும் செய்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை ஐபிஎல் தொடர்களில் அதிக முறை அதாவது 7 முறை வீழ்த்தியுள்ள பௌலர் என்ற பெருமையும் அவருக்கு இன்றைய போட்டியில் கிடைத்துள்ளது. இன்றைய போட்டியில் ரோகித் சர்மாவை அவர் 9வது ஓவரில் வீழ்த்தியுள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Mishra became the bowler to have dismissed the MI skipper most number of times in IPL history
Story first published: Tuesday, April 20, 2021, 22:24 [IST]
Other articles published on Apr 20, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X