சச்சினின் 100வது சதம் குறித்த அதீத எதிர்பார்ப்பு இந்தியாவைப் பாதிக்கும்-ஆண்டர்சன்

By Sutha
Sachin Tendulkar
லண்டன்: சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் குறித்து இந்திய அணியினரின் அதீத எதிர்பார்ப்பு, இந்திய அணியின் செயல்பாடுகளைப் பாதிக்கும் என்று இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

அதீத எதிர்பார்ப்புகள் காரணமாக சச்சின் கவனமும், அவரது அணியினரின் கவனமும் திசை திரும்பி அவர்களது செயல்பாடுகளை அது பாதிக்கும் என்றும் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,99 சதங்களைப் போட்டு விட்டு சச்சின், தனது 100வது சதத்தை லார்ட்ஸ் மைதானத்தி்ல போடுவார் என்ற அதீத எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்களும், அணியினரும் உள்ளனர். அது சச்சின் மற்றும் இந்திய அணிக்குப் பாதிப்பையே ஏற்படுத்தும். இயல்பான ஆட்டப் போக்கை அது தடுக்க உதவும்.

சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியின்போது இலங்கை வீரர் திணேஷ் சண்டிமால் சதம் போடுவதற்காக மிக மிக மெதுவாக விளையாடி அணியின் ஸ்கோர் உயர்வை பாதித்தார் என்பது நினைவிருக்கலாம். அவர் விளையாடிய விதம் கிரிக்கெட் ஆட்டத்தையும், எங்களையும் அவமதிப்பது போல இருந்தது.

எனவே முதல் டெஸ்ட் போட்டியிலேயே சச்சின் தனது 100வது சதத்தைப் போடுவார் என்ற அதீத எதிர்பார்ப்பு ஆபத்தில்தான் முடியும்.

எது எப்படியோ, லார்ட்ஸ் போட்டியில் சச்சினை ரன் எடுக்க விடாமல் தடுக்க நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம். சி்ன்னச் சின்ன தவறுகளைச் செய்ய வைத்து இந்தியர்களைத் தடுமாற வைப்போம்.

அதேசமயம், சச்சினை கோபப்படுத்தும் வகையில் நான் ஒரு வார்த்தையும் பேச மாட்டேன். அப்படிச் செய்தால் அது சச்சினை கோப்பபடுத்தாது, மாறாக இன்னும் சிறப்பாக விளையாடத் தூண்டி விடும். அது எங்களுக்குத்தான் கஷ்டம். எனவே அவரை தூண்டும் விதமாக நான் பேச மாட்டேன் என்றார் ஆண்டர்சன்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
England pacer James Anderson concedes sledging never really distracts Sachin Tendulkar but what might have a "detrimental effect" on him and India during the Test series starting next week is the massive hype around the veteran batsman's impending 100th ton. "Having watched the way Sachin Tendulkar has made some of his 99 international hundreds over the years, you would have thought he'd be the last person to be affected by the fuss about making his 100th at Lord's," Anderson said referring to the opening Test starting July 21 at the Lord's.
Story first published: Sunday, July 17, 2011, 14:32 [IST]
Other articles published on Jul 17, 2011
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more