கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு.. அறிவித்தார் ஆஷிஷ் நெஹ்ரா!

Posted By:

ஹைதராபாத்: அனைத்து வகை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அறிவித்துள்ளார்.

நவம்பர் 1ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் தனக்கு வாய்ப்பளிக்க அணி நிர்வாகத்திடம் நெஹ்ரா கேட்டுக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதற்கு நிர்வாகமும் சம்மதித்துள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய நெஹ்ரா, "ஓய்வு முடிவு எனது சொந்த விருப்பத்தால் எடுக்கப்பட்டது. டெல்லியில் நவ.1ல் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்பேன். சொந்த ஊரில் ஆடிவிட்டு ஓய்வு பெறுவதைவிட பெரிய விஷயம் இருக்க முடியாது" என்றார்.

ஆஸி.க்கு எதிரான தொடரில் நெஹ்ரா

ஆஸி.க்கு எதிரான தொடரில் நெஹ்ரா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்காக நெஹ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் இதுவரை நடைபெற்ற இரு டி20 போட்டிகளிலும் அவருக்கு 11 பேர் அணியில், வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அனுபவ வீரர் நெஹ்ரா

அனுபவ வீரர் நெஹ்ரா

1999ம் ஆண்டு முகமது அசாருதீன் தலைமையிலான இந்திய அணியில் முதல் முறையாக காலடி எடுத்து வைத்தார் வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா. இந்தியாவுக்காக, 17 டெஸ்ட், 120 ஒருநாள், 26 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் நெஹ்ரா. டெஸ்டில் 44 விக்கட்டுகள், ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர் நெஹ்ரா.

ஆசைப்பட்ட நெஹ்ரா

ஆசைப்பட்ட நெஹ்ரா

ஆஸி.க்கு எதிரான தொடரில் ஆட தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஒரு வெப்சைட்டுக்கு அளித்த பேட்டியில், இன்னும் இரண்டு ஆண்டுகளாவது கிரிக்கெட் ஆட எனக்கு ஆசைதான். ஆனால், எனது உடல்நிலை மீது எனக்கே கோபம் வருகிறது. 38, 39 வயதில் கிரிக்கெட் ஆடுவது ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு சிரமமான காரியம்தான். ஆனால் நான் முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆட முயல்கிறேன்.

வேகப்பந்து வீச்சாளரின் கஷ்டம்

வேகப்பந்து வீச்சாளரின் கஷ்டம்

டெல்லியின் குளிர்கால சூழ்நிலையில் நான் காலையில் எழும்போது, எனது முட்டியில் அதிகம் வலி ஏற்படுவதை உணர்ந்துள்ளேன். படுக்கையிலிருந்து எழுந்த பிறகு சரியாக நடக்க அரை மணி நேரமாவது தேவைப்படுகிறது. இவ்வாறு நெஹ்ரா கூறியிருந்தார். இந்த நிலையில்தான், இந்த ஆண்டே சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஓய்வளிக்க முடிவு செய்துள்ளார். அதேநேரம், இவரின் விரித்த அனுபவத்தை கருத்தில் கொண்டு பல ஐபிஎல் அணிகளும், ஆலோசகர் அல்லது பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்க ஆர்வம் காட்டிவருவதாக கூறப்படுகிறது.

Story first published: Thursday, October 12, 2017, 14:54 [IST]
Other articles published on Oct 12, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற