For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிக்ஸ் அடிக்கவே சொல்லிக் கொடுக்காத காலத்தில் அஸ்வினை மிரள வைத்த தோனி.. சிஎஸ்கேவில் நடந்த சம்பவம்!

சென்னை : அஸ்வின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று தோனியின் கவனம் ஈர்த்து, இந்திய அணியில் இடம் பெற்றவர்.

Recommended Video

Top 5 ODI captains with most matches

இன்று உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் அவர் 2008இல் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்ற போது நடந்த சம்பவம் பற்றி குறிப்பிட்டார்.

தான் தோனியின் கவனம் ஈர்க்க என்ன செய்தேன் என்பது பற்றியும் கூறி உள்ளார்.

இனி கிரிக்கெட்டே வேணாம்.. 2007இல் நொந்து போன சச்சின்.. காரணம் யார்? ரகசியத்தை உடைத்த கேரி கிர்ஸ்டன்இனி கிரிக்கெட்டே வேணாம்.. 2007இல் நொந்து போன சச்சின்.. காரணம் யார்? ரகசியத்தை உடைத்த கேரி கிர்ஸ்டன்

வித்தியாசம்

வித்தியாசம்

அப்போது முத்தையா முரளிதரன் பந்து வீசிய போது தோனி வலைப் பயிற்சியில் ஆடிய ஆட்டத்தை நினைவுகூர்ந்து, எப்படிப்பட்ட பேட்ஸ்மேனாக தோனி இருந்தார் என கூறி உள்ளார். மேலும், இப்போதுள்ள தோனிக்கும், அப்போது உள்ள தோனிக்குமான வித்தியாசத்தையும் கூறி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் தொடர் துவங்கிய போது தமிழ்நாடு அணி வரை மட்டுமே முன்னேறி இருந்த அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றார். அப்போது சர்வதேச அனுபவம் பெறாத வீரரான அவர் கேப்டன் தோனியின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்தார்.

யார் என்றே தெரியாது

யார் என்றே தெரியாது

அப்போது தான் வலைப் பயிற்சியில் மேத்யூ ஹெய்டன், ஸ்டீபன் பிளெம்மிங் மற்றும் ஜேக்கப் ஓரம் போன்ற சர்வதேச வீரர்களை ஈர்த்ததாகவும், ஆனால், தோனிக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் கூறினார். தோனிக்கு தான் யார் என்றே தெரியாது என்றும் கூறினார்.

வரிசையில் அஸ்வின்

வரிசையில் அஸ்வின்

பின்னர் வலைப் பயிற்சியில் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா பேட்டிங் செய்யும் பிட்ச்சில் தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என வரிசையில் காத்திருப்பாராம் அஸ்வின். அப்போது ஒரு முறை வாய்ப்பு கிடைத்துள்ளது. அப்போது முத்தையா முரளிதரனும், அஸ்வினும் மாறி மாறி பந்து வீசி இருக்கிறார்கள்.

ஒவ்வொரு பந்தையும் அடிப்பார்

ஒவ்வொரு பந்தையும் அடிப்பார்

அப்போது தோனியின் ஆட்டத்தை அருகே இருந்து பார்த்த அஸ்வின், "முரளிதரன் ஒவ்வொரு முறை பந்து வீசும் போதும் தோனி அதை தூரமாக அடித்தார். தோனி இன்று கணக்கு போட்டு ஆடி வருகிறார். ஆனால், அந்த சமயத்தில் நான் பார்த்த போது அவர் ஒவ்வொரு பந்தையும் அடிப்பார்" என்றார்.

கூரை மேல் சிக்ஸ்

கூரை மேல் சிக்ஸ்

மேலும், "முரளிதரன் ஒவ்வொரு முறையும் பந்து வீசும் நீளத்தை அதிகரிக்க, அதிகரிக்க தோனி இன்னும் தூரமாக அடித்துக் கொண்டிருந்தார். சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தின் கூரை மேல் எப்படியும் 5 - 6 பந்துகளை அடித்திருப்பார்." என்றார்.

அந்த காலத்தில்..

அந்த காலத்தில்..

"யாரும் அந்த அளவிற்கு தூரமாக பந்தை அடித்து நான் பார்த்ததே இல்லை. மேலும், அந்த காலத்தில் அது மிகவும் புதிது. இளம் வயதில் எங்களுக்கு சிக்ஸ் அடிப்பது பற்றி சொல்லிக் கொடுக்கவே மாட்டார்கள்" என்றார் அஸ்வின்.

Story first published: Wednesday, June 17, 2020, 23:13 [IST]
Other articles published on Jun 17, 2020
English summary
Ravichandran Ashwin exclaimed when Dhoni hit sixes off Muttiah Muralitharan in CSK net practice in 2008.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X