சேர்ந்து டயட் இருக்கலாமா... மனைவியுடன் டிவிட்டரில் காதல் மொழி பேசிய அஸ்வின்

Posted By:

சென்னை: இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது மனைவியுடன் சேர்ந்து 6 ஆம் ஆண்டு திருமண விழாவை நேற்று கொண்டாடினார். இதற்காக டிவிட்டரில் அஸ்வின் தனது மனைவி பிரீத்திக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

அஸ்வினின் வாழ்த்துக்கு அவரது மனைவி மிகவும் காமெடியாக பதில் அளித்து இருந்தார். இதையடுத்து அவர்களது திருமண கொண்டாட்டம் டிவிட்டர் முழுக்க வைரல் ஆனது.

மேலும் பிரீத்தி அஸ்வின் அவர்களது கல்யாணம் முடிந்த முதல் நாள் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றையும் பகிர்ந்து கொண்டார்.

இப்படியே எப்பவும் சேர்ந்து இருக்கணும்

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கும் பிரீத்தி என்ற பெண்ணுக்கும் ஆறுவருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் நேற்று அவர்கள் தங்களது திருமண விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். இது குறித்து அஸ்வின் டிவிட்டரில் "இதோ திருமணம் ஆகி ஆறு வருடம் முடிந்துவிட்டது. 6 வருடம் போனதே தெரியவில்லை. என்னுடைய எல்லா சூழ்நிலையிலும் கூட இருந்ததற்கு நன்றி'' என்று கூறினார்.

பிரீத்தி அஸ்வினின் காமெடியான பதில்

அஸ்வினின் பாசமான இந்த டிவிட்டுக்கு பிரீத்தி அஸ்வின் மிகவும் காமெடியாக பதில் அளித்துள்ளார். அதில் ''ஆமா நாம நல்லது கேட்டதுல எப்படியோ மேனேஜ் பண்ணிட்டோம். ஆனா நம்ம கல்யாணம் வாழ்க்கை ஒன்னா சேர்ந்து டயட் இருக்குற அளவுக்கு ஸ்ட்ராங்க இருக்குமா..?'' என்று கேட்டு இருக்கிறார். இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் கீடோ என்பது உடலை குறைக்கும் டயட் முறையாகும்.

நடக்கும் ஆனா நடக்காது

பிரீத்தி அஸ்வினின் டிவிட்டுக்கு அதே போல் காமெடியாக பதில் அளித்துள்ளார் அஸ்வின். அதில் ''கண்டிப்பா நம்மால முடியும். ஆனா நம்ம குழந்தை அகிரா தூங்குறப்பவே நாமளும் எப்படியாவது தூங்கிடணும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

முதல் இரவுல அலாரம் வச்சு இருந்தாங்க

இந்த நிலையில் பிரீத்தி அஸ்வின் திருமணம் ஆன அன்று நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார். அதில் ''கல்யாணம் அன்று நாங்க கொல்கத்தாவில் இருந்தோம். அவருக்கு மறுநாள் கிரிக்கெட் போட்டி இருந்ததால் தூங்க சென்றுவிட்டார். ஆனால் இந்திய அணி எங்களுக்கு தெரியாமல் அறையில் அலாரம் வைத்து இருந்தது. அப்பறம் எப்படியோ மறுநாள் விளையாட போனார்'' என்று எழுதி இருக்கிறார்.

Story first published: Tuesday, November 14, 2017, 17:58 [IST]
Other articles published on Nov 14, 2017
POLLS

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற