For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஏதோ சதி நடக்கிறது.. இந்திய வீரர்களை வீதிக்கு இழுத்து.. கோபப்படுத்திய ஆஸி.. அதே "ஆஷஸ்" டெக்னிக்!

சிட்னி: இந்திய அணியின் 5 மூத்த வீரர்களை வீதிக்கு இழுத்து ஆஸ்திரேலிய நிர்வாகம் அசிங்கப்படுத்தி உள்ளது. மிகவும் அமைதியாக சென்று கொண்டு இருந்த தொடரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தேவை இல்லாத சர்ச்சைக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடரில் கலந்து கொள்வதற்காக இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா சில நாட்களுக்கு முன்புதான் ஆஸ்திரேலியா சென்று இந்திய அணியுடன் இணைந்தார்.

கட்டிப்பிடித்த ரசிகர்.. ரோஹித் உட்பட 5 வீரர்களை தனி அறையில் அடைத்த ஆஸி.. ஷாக் சம்பவம் - பின்னணி கட்டிப்பிடித்த ரசிகர்.. ரோஹித் உட்பட 5 வீரர்களை தனி அறையில் அடைத்த ஆஸி.. ஷாக் சம்பவம் - பின்னணி

இப்படிப்பட்ட நிலையில் ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகியோர் தற்போது மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரிய சர்ச்சையாகி உள்ளது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

ஆஸ்திரேலியாவில் ஹோட்டல் ஒன்றில் உணவு உட்கொண்ட போது இவர்கள் விதியை மீறியதாக கூறி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அங்கு ரசிகர் ஒருவரை இவர்கள் கட்டிப்பிடித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா விதிகளை மீறிவிட்டதாக இவர்கள் கூறி இவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியா தலையீடு

ஆஸ்திரேலியா தலையீடு

இதில் கவனிக்க வேண்டிய விஷயம், இந்த சர்ச்சையை பெரிதாக்கியது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்தான். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்தான் இந்திய வீரர்களை தனியாக இருக்கும்படி கூறியது. இவர்களை தனிமைப்படுத்தும்படியும், தனியாக பயிற்சி மேற்கொள்ளும்படியும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்தான் கூறியது.

பிசிசிஐக்கு நெருக்கடி

பிசிசிஐக்கு நெருக்கடி

பிசிசிஐ அமைப்பிற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் இதனால் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்திய அணியின் டெஸ்ட் வெற்றியை பொறுக்க முடியாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மெண்டல் பிரஷர் கொடுக்கிறது என்று கூறுகிறார்கள். முக்கியமான வீரர்களை தனிமைப்படுத்த வைத்து, அவர்களின் கவனத்தை சிதறடிக்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிடுகிறது.

சதித்திட்டம்

சதித்திட்டம்

ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டார்க் உட்பட பலர் போட்டிக்கு இடையே தங்கள் குடும்பத்தை சென்று சந்தித்தனர். ஆனால் அவர்கள் யாருமே தனிமைப்படுத்தவில்லை. வார்னர் இடையில் வீட்டிற்கு சென்றுவிட்டு வந்தார், அவர் தனிமைப்படுத்தப்படவில்லை. அப்படி இருக்கும்போது ஹோட்டலுக்கு சென்று இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய அணி தனிமைப்படுத்துகிறது.

சிக்கல்

சிக்கல்

வேண்டும் என்றே வீரர்களை சர்ச்சைக்கு உள்ளாக்கி, அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வழி இது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியுள்ளனர். பொதுவாக ஆஷஸ் தொடர் நடக்கும் போது இங்கிலாந்து வீரர்களை இப்படி ஆஸ்திரேலிய அணி மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாக்கும். உப்புத்தாள் விஷயத்திற்கு பின் இது போன்ற செயலை ஆஸ்திரேலியா நிறுத்தி இருந்தது.

இந்தியா

இந்தியா

தற்போது இங்கிலாந்து அணிக்கு பதிலாக இந்திய அணி மீது ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்து, அவர்களின் பயிற்சியை கெடுத்து, அதை வைத்து களத்தில் ஸ்டெல்ட்ஜ் செய்து விக்கெட் எடுக்கும் யுக்தி இது. முக்கியமாக சிட்னி டெஸ்ட் போட்டிகளில் பலமுறை இப்படி நடந்துள்ளது . அதைத்தான் ஆஸ்திரேலிய அணி இப்போதும் செய்கிறது என்று கூறுகிறீர்கள்.

Story first published: Sunday, January 3, 2021, 10:17 [IST]
Other articles published on Jan 3, 2021
English summary
Australia Cricket board gives unwanted pressure on Rohit Sharma and co before the third test.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X