என்னாது.. இது அவுட்டா? தப்பு தப்பாக வந்த அம்பயர் தீர்ப்பு.. கோபத்தில் கொந்தளித்த ஆஸி கேப்டன்!

Australia vs New Zealand | Tim Paine angered with wrong DRS decisions and tracking technology

மெல்போர்ன் : நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது ஆஸ்திரேலியா.

இந்தப் போட்டியின் இரண்டாம் நாளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு டிஆர்எஸ் தீர்ப்புகள் அளிக்கப்பட்டன. அப்போது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

மீண்டும் மூன்றாவது நாள் ஆட்டத்தில் ஒருமுறை நியூசிலாந்து அணியின் விக்கெட்டுக்கு கேட்ட டிஆர்எஸ் தீர்ப்பு தவறாக அளிக்கப்பட்டதால் விரக்தி அடைந்தார் அவர்.

உங்க இஷ்டத்துக்கெல்லாம் பண்ணக் கூடாது.. கங்குலி அதிரடி உத்தரவு.. இந்திய வீரர்களுக்கு கிடுக்கிப்பிடி!

டெஸ்ட் போட்டி

டெஸ்ட் போட்டி

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலியா அபாரம்

ஆஸ்திரேலியா அபாரம்

ஸ்டீவ் ஸ்மித் 85, லாபுஷாக்னே 63, ட்ராவிஸ் ஹெட் 114, டிம் பெய்ன் 79 ரன்கள் குவித்தனர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்க்ஸில் 467 ரன்கள் குவித்தது. டிம் பெய்ன் எல்பிடபுள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

டிம் பெய்ன் கேட்ட ரிவ்யூ

டிம் பெய்ன் கேட்ட ரிவ்யூ

அவருக்கு அம்பயர் அவுட் கொடுத்த போது, டிம் பெய்ன் டிஆர்எஸ் ரிவ்யூ கேட்டார். அந்த பந்து லைனில் பிட்ச் ஆகி இருக்கவோ, ஸ்டம்ப்பை தகர்க்கவோ அதிக வாய்ப்பில்லை என்றே பலரும் கருதினர்.

அவுட் உறுதி

அவுட் உறுதி

எனினும், ட்ராக்கிங் தொழில்நுட்பத்தின் படி ரீப்ளேவில் பந்து ஸ்டம்ப்பை தகர்ப்பதாக காண்பிக்கப்பட்டது. அதனால், அவரது அவுட் உறுதி செய்யப்பட்டது. அது நம்ப முடியாததாக இருந்ததாக வர்ணனை செய்து வந்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் கூறினர்.

ராஸ் டெய்லர் விக்கெட்

ராஸ் டெய்லர் விக்கெட்

அடுத்ததாக அதே நாளில், நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லருக்கு எல்பிடபுள்யூ அவுட் கொடுக்கப்பட்டது. அவர் ரிவ்யூ கேட்டார். இந்த முறை ட்ராக்கிங் தொழில்நுட்பத்தின் படி பந்து ஸ்டம்புக்கு மேலே செல்வதாக காண்பிக்கப்பட்டது. அதனால் அவர் தப்பித்தார்.

தவறான தீர்ப்பு

அதைக் கண்ட ஆஸ்திரேலியர்கள் மீண்டும் இது தவறான தீர்ப்பு, தவறான தொழில்நுட்பம் எனக் கூறினர். இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

வாய்ப்பே இல்லை

வாய்ப்பே இல்லை

முதலில் தனது விக்கெட் பற்றி பேசிய அவர், "அந்த பந்து பிட்ச் ஆன லென்த்தை வைத்து பார்க்கும் போதும், அந்த பந்துவீச்சாளர் அரவுண்ட் தி விக்கெட்டில் பந்தை வீசியதை வைத்தும் பார்த்தால் பந்து லைனில் பிட்ச் ஆகி, ஸ்டம்ப்பை தகர்க்க வாய்ப்பே இல்லை" என்றார்.

கோபம்

கோபம்

அடுத்து ராஸ் டெய்லர் விக்கெட் பற்றி பேசினார். "அவர் கிரீஸில் பந்தை சந்தித்தார். அவர் மீது பந்து ஃபுல் லென்த்தில் அடித்தது. ஆனால், அந்த பந்து ஸ்டம்புக்கு மேல் செல்கிறது. இது எனக்கு ஏமாற்றமாகவும், கோபமூட்டக் கூடியதாகவும் உள்ளது" என்று பொங்கினார் டிம் பெய்ன்.

சிக்கலில் மாட்டிக் கொள்வேன்

சிக்கலில் மாட்டிக் கொள்வேன்

"எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் இது குறித்து ஆழமாக செல்ல விரும்பவில்லை. ஏனெனில், நான் சிக்கலில் மாட்டிக் கொள்வேன்" என்று கூறி ஐசிசி விதிகளை மனதில் வைத்து பாதியில் புகார் சொல்வதை நிறுத்திக் கொண்டார் ஆஸ்திரேலிய கேப்டன்.

மீண்டும் தவறு

மீண்டும் தவறு

இதில் வேடிக்கை என்னவென்றால், மூன்றாம் நாளிலும் இதே போன்ற மூன்றாவது அம்பயரின் தவறான தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்தது ஆஸ்திரேலியா. மிட்செல் சான்ட்னர் கையில் அணிந்து இருந்த உறையில் பந்து உரசி கேட்ச் பிடிக்கப்பட்டது. ஆனால், மூன்றாவது அம்பயர் ரிவ்யூவில் கேட்ச் கொடுக்க மறுத்துவிட்டார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Australia vs New Zealand : Tim Paine angered with wrong DRS decisions and tracking technology.
Story first published: Saturday, December 28, 2019, 14:46 [IST]
Other articles published on Dec 28, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X