For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

57 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த இந்தியா.. பிறகு அதிரடி காட்டிய சூர்யா,அக்சர்.. இலங்கை போராடி வெற்றி

புனே: இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு போல், இரு அணிகளும் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தினர்.

முதல் டி20 போட்டியில் இழந்த இலங்கை அணி, தொடரை உயிரோடு வைத்திருக்க, இன்றைய ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கினர்.

தொடக்க வீரராக களமிறங்கிய இந்திய அணியின் நிசாங்கா மற்றும் குசேல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி, இலங்கை ரசிகர்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

குறிப்பாக ஆர்ஸ்தீப் சிங் 3 நோ பால்களை கொடுத்து, இலங்கை வீரர்களுக்கு புத்தாண்டு பரிசை அளித்தார். இதன் மூலம் 5.1 வது ஓவரிலேயே இல்ங்கை அணி 5 ரன்களை தொட்டது.சிறப்பாக விளையாடிய குசேல் மெண்டிஸ் 27 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். அதிரடியாக விளையாடிய மெண்டிஸ் 52 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ராஜபக்சா உம்ரான் மாலிக் பந்தில் கிளின் போல்ட் ஆனார்.

ஷனாகா அதிவேக 50

ஷனாகா அதிவேக 50

.இதே போன்று 19 பந்துகளில் அசலாங்கா 4 சிக்சர் விளாசி 37 ரன்கள் அடித்தார். எனினும் அசலங்காவும் உம்ரான் மாலிக் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். ஆல்ரவுண்டர் ஹசரங்காவும் உம்ரான் பந்தில் கிளின் போல்ட் ஆனார். இதன் மூலம் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை சேர்ப்பதற்குள் 138 ரன்கள் எடுத்தது. அப்போது தனது அதிரடியை காட்டிய ஷனாகா 20 பந்துகளில் அரைசதம் எடுத்தார். கடைசி 3 ஓவரில் இலங்கை அணி 59 ரன்கள் எடுத்தது. 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 206 ரன்கள் விளாசியது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அபாரமாக பந்துவீசி இந்தியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. இஷான் கிஷன் 2 ரன்களிலும், சுப்மான் கில் 5 ரன்களிலும் ராகுல் திரிபாதி 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஹர்திக் பாண்டியா 12 ரன்களிலும், தீபக் ஹூடா 9 ரன்களிலும் வெளியேற,இந்திய அணி 57 ரன்கள் சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

 அபார பார்ட்னர்ஷிப்

அபார பார்ட்னர்ஷிப்

ஒரு கட்டத்தில் இலங்கை அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில், அக்சர் பட்டேல் சூர்யகுமார் இணைந்த அதிரடி காட்டினர். 6 சிக்சர்களை விளாசிய அக்சர் பட்டேல் 30 பந்துகளில் 65 ரன்கள் குவித்தார். இதே போன்று சூர்யகுமார் 36 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். இதனால் இந்தியா மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தது.

போராட்டம் வீண்

போராட்டம் வீண்

அப்போது முக்கிய கட்டத்தில் சூர்யகுமார் ஆட்டமிழக்க, சிவம் மவியும் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசி இலங்கைக்கு அதிர்ச்சி அளித்தார். எனினும் இலங்கை வீரர்கள் இந்தியா போல் நோ பால் வீசாமல் இருந்ததால், 20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 190 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் இந்தியாவால் அதனை எட்ட முடியவில்லை.

Story first published: Thursday, January 5, 2023, 23:05 [IST]
Other articles published on Jan 5, 2023
English summary
Axar Patel and suryakumar brilliant innings goes vain in sl 2nd t20 57 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்த இந்தியா.. பிறகு அதிரடி காட்டிய சூர்யா,அக்சர்.. இலங்கை போராடி வெற்றி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X