For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஓவர் கான்பிடன்ஸ்’ உடம்புக்கு ஆகாது….

By Srividhya Govindarajan

கொழும்பு: தலைப்பை பார்த்தும், உத்தர பிரதேச லோக்சபா இடைத் தேர்தல் முடிவு குறித்து அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியது உங்களுக்கு நினைவு வந்தால், உங்களுடைய முதுகை நீங்களே தட்டிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு பொது அறிவு, நடப்பு அரசியல் தெரிந்திருக்கிறது. ஆனால், இது கிரிக்கெட் போட்டி குறித்து செய்தி. அதற்கும் இது பொருந்தும்.

Bangladesh enters finals


இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி, நிதாஸ் கோப்பை முத்தரப்பு டி-20 போட்டி, இலங்கையில் நடந்து வருகிறது. இந்தியா ஏற்கனவே பைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.

நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறுபவர்களே, நாளை நடக்கும் பைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெறுவர் என்ற நிலையில், இலங்கையும், வங்கதேசமும் விளையாடின.

முதலில் விளையாடிய இலங்கை, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. வங்கதேசத்தை சுருட்டி விடலாம் என்று இலங்கை நினைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் என்ற நிலையில் வங்கதேசம் இருந்தது. மூன்று பேர் டக் அவுட், என்று வங்கசேதம் ஒரு கட்டத்தில் சொதப்பியது. கடைசி மூன்று ஓவர்களில் 30 ரன்கள் தேவை என்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த நேரத்தில்தான், உத்தர பிரதேசம் நம்முடைய மாநிலம், லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் அசத்தியுள்ளோம். இடைத் தேர்தல் நமக்கு ஒரு பொருட்டா என்ற நிலையில் இலங்கை இருந்தது,

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை. அந்த நிலையில், முஸ்தாபிசுர் ரஹ்மான் ரன் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்போது களத்தில் இருந்து மெஹ்மதுல்லா கடைசி ஓவரின் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விளாசினார். அதற்கடுத்து, ஒரு சிக்சர் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

நாளை நடக்கும் பைனல்ஸில் இந்தியாவுடன் வங்கதேசம் மோதுகிறது.

Story first published: Saturday, March 17, 2018, 18:55 [IST]
Other articles published on Mar 17, 2018
English summary
Bangladesh enters finals by thrill win over Srilanka
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X