For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வலுவிழந்த வங்கதேசம் பாகிஸ்தானை எப்படி வீழ்த்தியது? ரஹீம் சொல்லும் ரகசியம்

அபுதாபி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் நேற்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணியை நிர்ணயித்த இந்த போட்டியில், வங்கதேச அணி தன் உச்சகட்ட போராட்ட குணத்தை வெளிபடுத்தியது. பேட்டிங்கில் இரண்டு வீரர்கள் மட்டுமே ராப் குவித்தாலும், பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கியது அந்த அணி.

[உலகக்கோப்பை அணிகளுக்கு எச்சரிக்கை.. ஆசிய கோப்பைக்கு பின் ஆப்கானிஸ்தான் கேப்டன் பேச்சு]

நேற்று 99 ரன்கள் குவித்து வங்கதேச வெற்றிக்கு காரணமாக இருந்த முஷ்பிகுர் ரஹீம் இந்த போராட்டம் மற்றும் வெற்றியின் பின் இருக்கும் ரகசியத்தை கூறினார்.

முக்கிய வீரர் ஷகிப் இல்லை

முக்கிய வீரர் ஷகிப் இல்லை

நேற்றைய போட்டியில் முக்கிய வீரர் ஷகிப் அல் ஹசன் இடம் பெறவில்லை. அவரது சுண்டுவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக அவர் வங்கதேசத்திற்கு சென்று விட்டார். அவர் அடுத்த சில வாரங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற முடியாத நிலையில் இருக்கிறார்.

தமிம் இக்பால் காயம்

தமிம் இக்பால் காயம்

ஏற்கனவே, முக்கிய வீரரான தமிம் இக்பால் ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் காயம் ஏற்பட்டு தொடரில் இருந்து விலகினார். அந்த பின்னடைவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே மீளாத வங்கதேசம், மற்றொரு ஆல் ரவுண்டர் ஷகிப்பை இழந்தது. இந்த நிலையில் பாகிஸ்தானை வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும்.

கேப்டன் அளித்த உத்வேகம்

கேப்டன் அளித்த உத்வேகம்

இந்த சூழ்நிலையில் வங்கதேச அணியின் கேப்டன் மொர்டாசா வீரர்களை வெற்றியை நோக்கி செலுத்தும் வகையில் பேசி உள்ளார். "போரில் இருக்கும் போது திரும்பி பார்க்காதீர்கள். ஒன்று செய் அல்லது செத்துமடி" என கூறி உள்ளார் அவர். முக்கிய வீரர்கள் இல்லாத சூழ்நிலை, ஆப்கன் அணிக்கு எதிராக தட்டுத் தடுமாறி பெற்ற வெற்றி மற்றும் 2 தோல்விகள் என எதையும் பார்க்காமல் வெற்றியை நோக்கி செல்ல இவ்வாறு கூறியுள்ளார் மொர்டாசா.

அணியின் வெற்றி தான் முக்கியம்

அணியின் வெற்றி தான் முக்கியம்

கேப்டன் மொர்டாசா வார்த்தைக்கு ஏற்ப வங்கதேச வீரர்கள் நேற்று போராட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பேட்டிங்கில் கொஞ்சம் சொதப்பல் தான். ஆனால், பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளித்து இரண்டு பேட்ஸ்மேன்கள் ஆடியதே அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது. ரஹீம் கூறுகையில் தான் 1 ரன்னில் சதத்தை தவற விட்டது பெரிய விஷயமில்லை. நான் ரன் குவித்தும் அணி தோற்றால் அதில் எந்த பயனும் இல்லை. எனவே, அணியின் வெற்றிதான் முக்கியம் என குறிப்பிட்டார்.

Story first published: Thursday, September 27, 2018, 13:29 [IST]
Other articles published on Sep 27, 2018
English summary
Bangladesh’s Rahim reveals the inspirational talk by captain Mortaza before Pakistan match
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X