டார்க்கெட் ஸ்கோரில் நடந்த குளறுபடி.. சென்னை சூப்பர் கிங்ஸ் வீரருக்கு பிசிசிஐ தடை!

Posted By:

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் அம்பதி ராயுடுவிற்கு பிசிசிஐ தடை விதித்து இருக்கிறது. மைதானத்தில் நடுவர்களிடம் விவாதம் செய்ததாக இவருக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

அம்பதி ராயுடு இதுபோல் ஏற்கனவே பல முறை சர்ச்சைகளுக்கு ஆளாகி இருக்கிறார். இந்த முறை இவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இவர் குற்றத்தை ஒப்புக் கொண்ட காரணத்தால் 2 விஜய் ஹாசாரே போட்டிகளில் விளையாட மட்டும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை அணிக்கு தேர்வு

அம்பதி ராயுடு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். 2.2 கோடிக்கு அம்பதி ராயுடு எடுக்கப்பட்டார். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் போட்டியில் இவர் கலக்கினார். ஐபிஎல் போட்டிக்கு என்றே செய்யப்பட வீரர் இவர். இவரின் வருகை சென்னை அணிக்கு புதிய பலம் ஆகும்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இந்த நிலையில் அம்பதி நேற்று சையது அலி முஸ்தபா கோப்பை போட்டியில் விளையாடி இருக்கிறார். அப்போது இவர் கர்நாடக அணி வீரர் கருண் ராயர் அடித்த பவுண்டரி ஒன்றிற்கு 2 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த அணி 204 ரன்கள் எடுத்தது.

மாற்றம்

மாற்றம்

ஆனால் கர்நாடக வீரர்கள் இதுகுறித்து முறையிட்டார்கள். இதனால் அணியின் ரன் 206 ஆக மாற்றப்பட்டது. மூன்றாவது அம்பயர் கொடுத்த வீடியோ ஆதாரத்தின் பேரில் இந்த ரன் சேர்க்கப்பட்டது.

தோல்வி

தோல்வி

206 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அம்பதி ராயுடுவின் ஹைதராபாத் அணி விளையாடியது. ஆனால் ஹைதராபாத் அணி 204 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. கர்நாடகாவின் பழைய இலக்கை அந்த அணி எடுத்து இருந்தது.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவர்

இதனால் ஹைதராபாத் அணியை சேர்ந்த அம்பதி உடனடியாக சென்று நடுவர்களிடம் முறையிட்டார். பழைய ஸ்கோர் படி ஆட்டம் டிரா ஆகி இருக்கிறது என்றார். இதை அம்பயர் ஏற்கவில்லை என்றதும் அவர்களிடம் வாக்குவாதம் செய்து சூப்பர் ஓவர் கேட்டார்.

போட்டியில் தடை

போட்டியில் தடை

இந்த நிலையில் அவருக்கு ஆட்ட நடுவர்கள் போட்டியில் கலந்து கொள்ள தடை விதித்தார்கள். அடுத்து நடக்க இருக்கும் 2 விஜய் ஹசாரே போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று கூறப்பட்டு இருக்கிறது. குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, February 1, 2018, 10:58 [IST]
Other articles published on Feb 1, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற