For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆகஸ்ட் மாதம் வரை தான் கெடு.. விராட் கோலிக்கு பிசிசிஐயிட்ட கட்டளை.. கடைசி வாய்ப்பு இது தான்

மும்பை:இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பிசிசிஐ கடைசி வாய்ப்பு ஒன்றை தந்துள்ளது.அண்மைக்காலமாக விராட் கோலி சரிவர விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அவர் சதம் அடித்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நடந்து முடிந்த இங்கிலாந்து தொடரில் கூட விராட் கோலி ஒரு முறை கூட அரை சதம் அடிக்கவில்லை.

விராட் கோலியை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பும் கோரிக்கை விடுத்துள்ளது. விராட் கோலியை உள்ளுர் கிரிக்கெட்டில் விளையாடச் சொல்லுங்கள் என முன்னாள் வீரர்கள் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

மழை, வெயில்.. சினிமாவை மிஞ்சிய காலே டெஸ்ட்.. பாகிஸ்தான் புதிய சாதனை.. 408 பந்துகளை எதிர்கொண்ட ஷபிக்மழை, வெயில்.. சினிமாவை மிஞ்சிய காலே டெஸ்ட்.. பாகிஸ்தான் புதிய சாதனை.. 408 பந்துகளை எதிர்கொண்ட ஷபிக்

எச்சரிக்கை

எச்சரிக்கை

இந்த நிலையில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள், டி20 தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஃபார்மில் இல்லாத வீரருக்கு ஓய்வு ஏன் வழங்கினீர்கள் என முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் தான் பிசிசிஐ விராட் கோலிக்கு ஒரு முக்கிய எச்சரிக்கையை வழங்கி இருக்கிறது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

அதாவது விராட் கோலி வரும் ஆகஸ்ட் இறுதியில் தொடங்கும் ஆசிய கோப்பை டி20 தொடருக்கு முன் அவரது ஃபார்மை உறுதி செய்ய வேண்டும். அதற்கு பலம் குன்றிய ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டியில் விராட் கோலி பங்கேற்று ரன்களை அடிக்க வேண்டும். ஜிம்பாப்வே உடன் விளையாடியாவது விராட் கோலி தனது பார்மை மீட்டெடுக்க வேண்டும் என்று பிசிசிஐ விராட் கோலியுடன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அணியிலிருந்து நீக்கம்

அணியிலிருந்து நீக்கம்

ஒரு வேலை ஜிம்பாப்வே தொடரிலும் விராட் கோலி சொதப்பினால் இந்திய அணில் இருந்து அதிரடியாக நீக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகி உள்ளது, தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறாத நிலையில் பிசிசிஐ விராட் கோலிக்கு ஜிம்பாப்வே தொடரில் வந்து விளையாடும் படி கூறியுள்ளது. ஒரு காலத்தில் ஜிம்பாபே போன்ற முக்கியத்துவம் குறைந்த தொடரில் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படும்,

அவமானப்படுத்த முயற்சி

அவமானப்படுத்த முயற்சி

ஆனால் விராட் கோலி ஃபார்மில் இல்லாததால் வெஸ்ட் இண்டீஸ் போன்ற முக்கிய தொடரில் ஓய்வு வழங்கிவிட்டு முக்கியத்துவம் இல்லாத ஜிம்பாப்வே தொடருக்கு விராட் கோலியை அழைத்துள்ளது பிசிசிஐ. இது விராட் கோலியை அவமானப்படுத்த எடுத்த முயற்சியா இல்லை இது உண்மையிலேயே அவர் மீது உள்ள அனுதாபத்தில் எடுத்த முயற்சியா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Story first published: Wednesday, July 20, 2022, 20:03 [IST]
Other articles published on Jul 20, 2022
English summary
BCCI Gives Last warning to the former india captain virat kohli regarding his formஆகஸ்ட் மாதம் வரை தான் கெடு.. விராட் கோலிக்கு பிசிசிஐயிட்ட கட்டளை.. கடைசி வாய்ப்பு இது தான்
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X