பேஸ்புக் பாஸ்வேர்ட் கேட்டா கொடுக்க முடியாதா.. இப்ப என்ன பண்ணுவ? செம ஆப்பு வைத்த புவனேஸ்வர் மனைவி!

லக்னோ : இந்திய கிரிக்கெட் அணி வீரர் புவனேஸ்வர் குமார் தன் மனைவியிடம் பேஸ்புக் பார்வேர்ட் கொடுக்க மறுத்துள்ளார்.

அதன் பின் அவரால் பேஸ்புக் கணக்கையே பயன்படுத்த முடியாதபடி செய்துள்ளார் அவரது மனைவி.

இது குறித்த சுவாரஸ்ய தகவலை சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அவரது மனைவியும் சில சுவாரஸ்ய சம்பவங்களை கூறினார்.

புவனேஸ்வர் குமார் காதல்

புவனேஸ்வர் குமார் காதல்

புவனேஸ்வர் குமார் கடந்த நவம்பர் 2017ஆம் ஆண்டு தன் நீண்ட நாள் காதலி நுபுர்-ஐ மணந்து கொண்டார். அவர் 2012ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகம் ஆனார். அதற்கு முன்பு இருந்தே நுபுரை காதலித்து வந்தார் புவனேஸ்வர்.

முதல் பந்திலேயே விக்கெட்

முதல் பந்திலேயே விக்கெட்

தன் முதல் ஒருநாள் போட்டியில், தன் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தினார். அதுவும் பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ்-ஐ கிளீன் போல்டு ஆக்கினார். அப்போது முதல் இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக திகழ்கிறார் புவனேஸ்வர்.

குடல் இறக்கம்

குடல் இறக்கம்

கடந்த 2019 உலகக்கோப்பை தொடர் முதல் அவர் காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். கடைசியாக அவருக்கு விளையாட்டு வீரர்களுக்கான குடல் இறக்கம் இருப்பதாக தெரிய வந்தது. அவர் தற்போது சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து அணிக்கு திரும்பி உள்ளார்.

பேட்டி அளித்தார்

பேட்டி அளித்தார்

இந்த நிலையில், தன் மனைவியுடன் சேர்ந்து "கிரிக்பஸ்" எனும் கிரிக்கெட் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது இருவரும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக அந்த பேஸ்புக் குறித்த விஷயம் சுவாரஸ்யமாக இருந்தது.

பாஸ்வேர்ட்டை கேட்டார்

பாஸ்வேர்ட்டை கேட்டார்

புவனேஸ்வர் குமார் கூறுகையில், "அவர் (நுபுர்) என் பேஸ்புக் கணக்கின் பாஸ்வேர்ட்டை கேட்டார். ஆனால், சில காரணங்களை கூறி தவிர்த்து வந்தேன். எனவே, அடுத்த நாள் அவர் என்னிடம் இதுதான் உன் புதிய பாஸ்வேர்ட் என்றார்." எனக் கூறினார்.

ஹேக் செய்து விட்டார்

ஹேக் செய்து விட்டார்

மேலும், "அவர் என் கணக்கை ஹேக் செய்து விட்டார். அதன் பின் நான் பேஸ்புக் கணக்கை பயன்படுத்தவே இல்லை" என்று தன் சோகக் கதையை கூறினார் புவனேஸ்வர் குமார். ஹேக் செய்வதில் நுபுர் பயங்கர கில்லாடியாக இருப்பார் போல.

மனைவியின் அனுபவம்

மனைவியின் அனுபவம்

புவனேஸ்வர் குமார் டி20 போட்டிகளில் அறிமுகம் ஆன போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் நுபுர். 2012ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அறிமுகம் ஆன புவனேஸ்வர் குமார், அந்தப் போட்டியில் 9 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் எடுத்தார்.

ரசித்தனர்

ரசித்தனர்

அந்தப் போட்டி நடந்து கொண்டிருந்த போது, நுபுர், விடுதியில் தோழிகளுடன் தங்கி இருந்துள்ளார். அப்போது புவனேஸ்வருடன் அவருக்கு இருந்த காதல் குறித்து அவரது தோழிகள் அறிந்திருக்கவில்லை. இந்த நிலையில், அவர்கள் புவனேஸ்வர் குமாரின் பந்துவீச்சை ரசித்துள்ளனர்.

நுபுர் மகிழ்ச்சி

நுபுர் மகிழ்ச்சி

மேலும், போட்டியின் இடையே "அந்த 15ஆம் நம்பர் டி-ஷர்ட்டை பவுலிங் போட சொல்லுங்க" என அவர்கள் கூறிய போது, தன் காதலருக்கு பெரிய "டிமாண்ட்" இருப்பதை அறிந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார் நுபுர். அதன் பின் புவனேஸ்வர் குமார் இந்திய அணியின் முக்கிய வேகப் பந்துவீச்சாளராக மாறியது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Bhuvneshwar Kumar facebook account was hacked by his wife
Story first published: Sunday, March 22, 2020, 13:02 [IST]
Other articles published on Mar 22, 2020
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X