நான் இப்படித்தான் 5 விக்கெட் எடுத்தேன்.. ஸ்லோ பால் ரகசியம் கூறும் புவனேஷ்வர் குமார்

Posted By:
5 விக்கெட் எடுத்ததற்கான ரகசியம் கூறும் புவனேஷ்வர் குமார்- வீடியோ

ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் புவனேஷ்வர் குமார் 5 விக்கெட் எடுத்து இருக்கிறார். எப்படி 5 விக்கெட் எடுத்தேன் என்றும் அவர் ரகசியம் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி-20 போட்டி ஜோஹன்ஸ்பெர்க் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்தியா தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடியது. ஷிகர் தவான் இரண்டு சிக்ஸர்களுடன் 72 ரன்கள் அடித்தார். இதனால் 20 ஓவரில் முடிவில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் எடுத்தது.

தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடியது. இதனால் 20 ஓவரில் முடிவில் தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுக்கு 175 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியா வெற்றிபெற்று டி-20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

சாதனை

இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 5 விக்கெட் எடுத்தார். டி-20 போட்டியில் 5 விக்கெட் எடுத்த முதல் இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 4 ஓவரில் சரியாக 24 ரன்கள் மட்டுமே இவர் கொடுத்தார்.

என்ன நடக்கும்

என்ன நடக்கும்

இதுகுறித்து புவனேஷ்வர் குமார் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் ''போட்டிக்கு போகும் முன் நான் யோசித்து பார்ப்பேன். அப்போதே தெரியும் இது சரிப்பட்டு வருமா, வராத என்று. எனக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதற்கு ஏற்றார் போல் கடைசி நேரத்தில் முடிவை மாற்றுவேன்'' என்றுள்ளார்.

பவுன்ஸ்

பவுன்ஸ்

மேலும் ''தென்னாப்பிரிக்க பவுலர்கள் அதிகம் பவுன்சர் வீசுவார்கள். அதையேதான் நாங்கள் அவர்களுக்கு பயன்படுத்துகிறோம். அதிக பவுன்சர்கள் வீசும் போது கேட்ச் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. தென்னாப்பிரிக்க மிடில் ஆர்டரில் பலருக்கு பவுன்சர் விளையாட தெரியாது'' என்றுள்ளார்.

மெதுவாக வீசுதல்

மெதுவாக வீசுதல்

முக்கியமாக ''நேற்றைய போட்டியில்தான் நாங்கள் அதிகமாக ஸ்லோ பால் வீசினோம். அதிக ரன் தேவைப்படும் சமயங்களில் இப்படி ஸ்லோ பால் வீசினால் பேட்ஸ்மேன் குழம்பி விக்கெட் விழும். அப்படித்தான் நேற்றும் நடந்தது. ஐந்து விக்கெட் எடுத்ததற்கு முக்கிய காரணம் இதுதான்'' என்றுள்ளார்.

Story first published: Monday, February 19, 2018, 12:46 [IST]
Other articles published on Feb 19, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற