ஒரே தொடரில் எங்கேயோ போய்விட்ட சாஹல், வாஷிங்டன் சுந்தர்!

Posted By: SRIVIDHYA GOVINDARAJAN

டெல்லி: இலங்கையில் நடந்த நிதாஸ் கோப்பை பைனல்ஸ் போட்டி, அதிரடி நாயகனாக, மேட்ச் வின்னராக தினேஷ் கார்த்திக்கை உருவாக்கியது. அதே நேரத்தில் இந்தத் தொடர், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் வாஷிங்டன் சுந்தரையும் எங்கேயோ கொண்டு சென்றுள்ளது.

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி நடந்த நிதாஸ் கோப்பை டி-20 போட்டித் தொடரில் இந்தியா கோப்பையை வென்றது. பைனல்ஸில் கடைசி இரண்டு ஓவர்களில் அதிரடியாக விளையாடி, கிரிக்கெட் உலகை தனது பக்கம் பார்க்க வைத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.

big jump for Sundar

இந்தத் தொடரில், தலா 8 விக்கெட்கள் எடுத்து, அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களாக யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். டி-20 போட்டிக்கான ஐசிசி தரவரிசையில் பவுலர்களில் 14வது இடத்தில் இருந்த சாஹல், இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதே நேரத்தில் சுந்தர், 151 இடங்கள் முன்னேறி, 31வது இடத்தைப் பிடித்துள்ளார். சாஹல் 706 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அதே நேரத்தில் தொடர் நாயகன் பட்டத்தை வென்ற சுந்தர், 496 புள்ளிகளுடன் உள்ளார்.

பேட்டிங்கில், ஷிகார் தவான் 11 இடங்கள் முன்னேறி, முதல் முறையாக, 17வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தத் தொடரில் விளையாடாத விராட் கோஹ்லி, 8வது இடத்துக்கு சென்றுள்ளார்.

8 பந்துகளில், 29 ரன்கள் குவித்து, இந்தியாவுக்கு கோப்பையை வென்று தந்த தினேஷ் கார்த்திக், 246 புள்ளிகளுடன், 126வது இடத்தில் இருந்து 95வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
Chahal jumped to no2 in ICC ranking
Story first published: Tuesday, March 20, 2018, 10:32 [IST]
Other articles published on Mar 20, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற