சென்னை மைதானத்துக்குள் கருப்பு சட்டைக்கு திடீர் தடை- அனிதாவுக்கு நீதி கோரி போரடலாம் என அச்சம்!

Posted By:

சென்னை: சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்குள் கிரிக்கெட் ரசிகர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு வருவதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு மையானத்தில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

Black Shirt are not allowed in Chennai Chepauk stadium

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு டோணி சென்னையில் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதால் ஏராளமான ரசிகர்கள் போட்டியை காண ஆவலுடன் மைதானத்துக்கு திரண்டனர்.

இந்நிலையில் ரசிகர்கள் பலர் கருப்பு சட்டை அணிந்து கொண்டு மைதானத்துக்கு சென்றனர். அவர்களுக்கு அனுமதி திடீரென மறுக்கப்பட்டது.

மேலும் சில அருகே உள்ள கடைகளில் வேறு சட்டையை வாங்கி அணிந்து கொண்டு வருமாறும் வலியுறுத்தினர். அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு மெரினாவில் கூட முடியாத நிலை ஏற்பட்டதால் கிரிக்கெட் போட்டியை பயன்படுத்திக் கொண்டு போராட்டம் நடந்துவிட்டால் என்ன செய்வது என்பதால் முன்னெச்சரிக்கையாக கருப்பு சட்டை அணிந்தவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Story first published: Sunday, September 17, 2017, 14:25 [IST]
Other articles published on Sep 17, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற