69 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த வங்கதேசம்.. கடைசியில் நடந்த டிவிஸ்ட்.. இது பங்காளதேஷ் தோனி! வேறவெலல்

டாக்கா : இந்தியாவுக்கு எதிரான 2வது ஓருநாள் போட்டியில் வங்கதேச அணி 250 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. ஏற்கனவே முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதால், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இன்று களமிறங்கியது.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் உம்ரான் மாலிக், முகமது சிராஜ், தீபக் சாஹ்ர் மற்றும் ஷர்துல் தாக்கூர் என்று 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது.

காயத்திலிருந்து குணமடைந்த அக்சர் பட்டேல், இன்று இந்திய அணிக்கு திரும்பினார். ஆனால் அவர் எதிர்பார்த்த அளவு செயல்படாமல் ரசிகர்களை ஏமாற்றினார்.

பாக். தோல்வியால் இந்தியாவுக்கு அடித்த லக்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு பிரகாசம்..விவரம் பாக். தோல்வியால் இந்தியாவுக்கு அடித்த லக்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி வாய்ப்பு பிரகாசம்..விவரம்

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

போட்டியின் தொடக்கம் முதலே இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அதி வேகமாக பந்துவீசி வங்கதேச வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். இந்த நிலையில், ஆட்டத்தின் 2வது ஓவரில் கேட்ச் பிடிக்க முயன்ற போது ரோகித் சர்வுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் போட்டியிலிருந்து விலகினார். அதன் பிறகு முகமது சிராஜ் வீசிய பந்தில் அனாமுல் ஹக் எல்பி டபிள்யூ ஆனார்.

சரிந்த விக்கெட்டுகள்

சரிந்த விக்கெட்டுகள்

வங்கதேச அணி கேப்டன் லிட்டன் தாஸ் ஸ்டம்பை முகமது சிராஜ் பதம் பார்த்தார். இதனைத் தொடர்ந்து உம்ரான் மாலிக் மேலும், ஷகிபுல் ஹசனுக்கு உம்ரான் மாலிக் ஷாட் பால்களாக தொடர்ந்து வீசினார்.இதில் ஒரு பந்து, ஷகிபுல் ஹசன் தலையிலும், உடலில் அடி வாங்கினார். வங்கதேச வீரர் ஷாண்டோ உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார்.

சரிவிலிருந்து மீட்பு

சரிவிலிருந்து மீட்பு

ஒரு கட்டத்தில் தற்காலிக கேப்டன் கேஎல் ராகுல் வாசிங்டன் சுந்தரை பந்துவீச அழைத்தார் அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வங்கதேச வீரர்கள் ஒரே ஓவரில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதன காரணமாக வங்கதேச அணி 69 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது மகமுதுல்லாவுடன் ஜோடி சேர்ந்த மெஹதி ஹசன் , பொறுப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

ரன் குவிப்பு

ரன் குவிப்பு

அதன் பிறகு, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தடுமாறினர். முதலில் பாரமாக பந்துவீசிய இந்திய வீரர்கள், பிறகு சொதப்பினார்கள். இதனை பயன்படுத்திக் கொண்ட மெஹதி ஹசன் மற்றும் மகமுதுல்லா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 148 ரன்களை சேர்த்து அசத்தியது. மகமுதல்லா 77 ரன்களில் வெளியேற, மெஹதி ஹசன் சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 271 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Brilliant come back by Bangladesh - Mehidy hasan century put india on back foot
Story first published: Wednesday, December 7, 2022, 16:03 [IST]
Other articles published on Dec 7, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X