கனவு உலகில் வாழ முடியாது.. உங்கள் பாராட்டு பொருட்டல்ல.. செய்தியாளர்களுடன் கோஹ்லி மல்லு கட்டு

Posted By:
பத்திரிக்கையாளர்களிடம் கோபப்பட்ட விராட் கோஹ்லி- வீடியோ

செஞ்சுரியன்: இந்திய கேப்டன் கோஹ்லி மீண்டும் பத்திரிக்கையாளரிடம் கோபமாக பேசி இருக்கிறார். ஏற்கனவே டெஸ்ட் தொடர் முடிந்த போது கோபமாக பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது.
ஒருநாள் தொடரை மிகவும் எளிதாக வென்று இருக்கிறது.

ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா தொடரை முதல்முறையாக இந்தியா கைப்பற்றியது.

டெஸ்டில் கோபம்

டெஸ்டில் கோபம்

டெஸ்ட் தொடரில் மட்டுமே இந்திய அணி மோசமாக விளையாடியது. 2-1 என டெஸ்ட் தொடரை இந்தியா இழந்தது. அப்போது இந்திய அணியின் பேட்டிங் தேர்வு குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது. அது குறித்த கேள்விகளுக்கு கோஹ்லி மிகவும் கோபமாக பதில் அளித்து இருந்தார்.

எப்படி நடந்தது

எப்படி நடந்தது

இந்த நிலையில் ஒருநாள் தொடர் முடிந்த பின் கோஹ்லியுடம் பத்திரிக்கையாளர் ஒருவர் இதுதான் இந்திய அணி வெளிநாட்டில் பெற்ற பெரிய வெற்றி என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு ''ஆமாம் இதுதான் பெரிய வெற்றி. ஆனால் போன மாதம் வரை மோசமான அணியாக இருந்த நாங்கள் எப்படி ஒரே வாரத்தில் உலகின் சிறந்த அணியாக மாறினோம் என்று புரியவில்லை. நீங்கள்தானே மோசமான தோல்வி என்று கூறினீர்கள். இப்போது நீங்கள்தான் சிறந்த வெற்றி என்று கூறியுள்ளீர்கள்.'' என்றார்.

முக்கியம் கிடையாது

முக்கியம் கிடையாது

மேலும் ''நீங்கள் எங்களை பற்றி என்ன நினைப்பீர்கள் என்று என்னால் கூற முடியாது. நீங்க நினைக்கிறீர்களோ அதை எழுதிக் கொள்ளுங்கள். எங்கள் வேலை விளையாடுவது அதை செய்வோம். நீங்கள் எழுதுவது எங்களை பாதிக்காது'' என்றார்.

கனவு

கனவு

அதேபோல் ''நீங்கள் எழுதுவதை வைத்து நாங்கள் கனவு உலகில் வாழ முடியாது. உங்களை பாராட்டை நான் தலையில் ஏற்றிக் கொள்வது இல்லை. நீங்கள் மோசமாக எழுதினாலும் அதை கண்டுகொள்ள மாட்டேன். நாங்கள் பயிற்சி செய்கிறோம், விளையாடுகிறோம். அவ்வளவுதான்'' என்று மிகவும் கோபமாக பேசியுள்ளார்.

Story first published: Sunday, February 18, 2018, 11:08 [IST]
Other articles published on Feb 18, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற