ஐபிஎல் நிர்வாகிகள் சொதப்பலால் கேப்டன்கள் சோகம்

Posted By:

சென்னை: மிகுந்த பரபரப்பை, எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் துவக்க விழாவில் 8 அணிகளின் கேப்டன்களும் ஒன்றாக சந்திக்க மாட்டார்கள். ஐபிஎல் நிர்வாகிகள் செய்த குளறுபடியால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி, 11வது சீசனை எட்டியுள்ளது. வரும் 7ம் தேதி மும்பையில் துவங்கும் இந்த சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.

கடந்த இரண்டு சீசன்களில் விளையாடாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல் அணிகள் மீண்டும் திரும்பியுள்ளன. அதனால், அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நடந்தது.

சிஎஸ்கேவுக்கு தான் கோப்பை

சிஎஸ்கேவுக்கு தான் கோப்பை

இரண்டு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பத்மபூஷண் டோணி தலைமையில் மீண்டும் களமிறங்குகிறது என்றதுமே, இந்த ஆண்டு கோப்பை அந்த அணிக்குதான் என்ற பேச்சு துவங்கவிட்டது.

சந்திக்க மாட்டார்கள்

சந்திக்க மாட்டார்கள்

வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் போட்டி துவங்கும் முன், துவக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில், போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளின் கேப்டன்களும் பங்கேற்பார்கள். ஆனால், இந்த முறை அதற்கான வாய்ப்பு இல்லை.

கேப்டன்கள் மிஸ்ஸிங்

கேப்டன்கள் மிஸ்ஸிங்

போட்டி துவங்கும் 7ம் தேதி மாலையில் துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கடுத்த நாளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் - டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. அதனால், இந்த நான்கு அணிகளின் கேப்டன்கள், மும்பையில் நடக்கும் துவக்க விழாவில் பங்கேற்றால், மறுநாள் போட்டிக்கு செல்வது சிரமமாக இருக்கும்.

குழப்பிய அதிகாரிகள்

குழப்பிய அதிகாரிகள்

இவ்வாறு கேப்டன்கள் திரும்பி செல்வது குறித்து, ஐபிஎல் நிர்வாகிகள் சரியாக திட்டமிடாததால், துவக்க விழாவில் மற்ற 6 அணி கேப்டன்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 10 சீசன்களில் இல்லாத அளவுக்கு, முதல் முறையாக, 7 அணிகளுக்கான கேப்டன்களாக இந்தியர்கள் உள்ளனர்.

முதல் முறையாக 7 இந்தியர்கள்

முதல் முறையாக 7 இந்தியர்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணி கேப்டனாக உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா, ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு விராட் கோஹ்லி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அஜங்யா ரஹானே, டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர், கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தினேஷ் கார்த்திக், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ரவந்திர அஸ்வின் கேப்டன்களாக உள்ளனர். சன் ரைசரஸ் அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக உள்ளார்.

ஆனால், இவர்கள் துவக்க விழாவில் பங்கேற்க முடியாத நிலை, நிர்வாகிகள் குழப்பத்தால் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் இவர்கள் பங்கேற்பார்கள்.

கிரிக்கெட்னா உயிரா?.. மைகேல் பேன்டசி கிரிக்கெட் ஆடி நிரூபிங்க பாஸ்!

English summary
IPL management made mess in the inauguration functlon. The IPL team captains would not be meeting each other.
Story first published: Wednesday, April 4, 2018, 18:15 [IST]
Other articles published on Apr 4, 2018

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற