ரோஹித்துக்கு 200.. இந்தியாவுக்கு 100!

Posted By: Lekhaka

மொகாலி: இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருதினப் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து சாதனை புரிந்துள்ள நிலையில், இந்திய அணியும் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த நிலையில், மொகாலியில் நேற்று நடந்த இரண்டாவது ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றது.

கேப்டன் ரோஹித் சர்மா மூன்றாவது முறையாக இரட்டை சதம் அடித்து புதிய உலகச் சாதனைப் படைத்தார். இதே போட்டியில் இந்திய அணியும் சைலெண்டாக ஒரு சாதனையைப் படைத்துள்ளது.

இந்தியா சதம்

இந்தியா சதம்

ஒருதினப் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடிப்பதில், இந்தியா சதம் அடித்துள்ளது. நேற்றைய போட்டியில் 392 ரன்கள் எடுத்ததன் மூலம், 100வது முறையாக, 300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த முதல் அணியாக இந்தியா விளங்குகிறது.

இந்தியா 78

இந்தியா 78

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, 96 முறை 300க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளது. அவ்வாறு 300க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்த போட்டிகளில் ஆஸ்திரேலியா 85ல் வென்றுள்ளது. இந்தியா, 78ல் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.

இது 25வது முறை

இது 25வது முறை

ஒரு போட்டியில் 350க்கும் அதிகமான ரன்கள் இந்தியா அடித்துள்ளது இது 25வது முறையாகும். தென்னாப்பிரிக்கா அணி, 26 முறை 350க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளது. ஒருதினப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த அணிகளில், தென்னாப்பிரிக்கா 6 முறை எடுத்து முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 5 முறை எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியா 10 முறை

இந்தியா 10 முறை

இதனிடையில் ஒரு ஆண்டில் அதிகப் போட்டிகளில் 300க்கும் மேற்பட்ட ரன்கள் எடுத்த அணிகளில் ஆஸ்திரேலியா 11 முறை எடுத்து முதல் இடத்தில் உள்ளது. இந்தியா, 2009 மற்றும் இந்த ஆண்டில்,10 முறை 300க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளது. இலங்கைக்கு எதிராக மற்றொரு ஒருதினப் போட்டி உள்ளதால், ஆஸ்திரேலியாவின் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு உள்ளது.

Story first published: Thursday, December 14, 2017, 9:26 [IST]
Other articles published on Dec 14, 2017

myKhel பிரேக்கிங் அலர்ட்டுகளைப் பெற