For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு என்ட்ரி.. சி.எஸ்.கே ரசிகர்களை புகழ்ந்து பேசிய தல தோனி.. செம!

துபாய்: நடப்பு ஐ.பி.எல் தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். நேற்று நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது.

ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்ய கடந்த போட்டியில் அதிரடி அரைசதம் விளாசிய ஜேசன் ராய் 2 ரன்களில் ஹேசல்வுட்டின் வேகத்தில் வெளியேறினார். விரித்திமான் சாஹா ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள் விளாசிய போதிலும், மந்தமான இந்த ஆடுகளத்தில் பந்து பவுண்டரிக்கு செல்ல மறுத்தது.

 வயசாயிடுச்சா... தோனி செய்த மிகப்பெரும் வயசாயிடுச்சா... தோனி செய்த மிகப்பெரும்

சிறப்பான தொடக்கம்

சிறப்பான தொடக்கம்

அதன்பின்னர் ஹைதராபாத்துக்கு சொல்லிவைத்தாற்போல் விக்கெட்டுகள் தொடர்ந்து விழ 20 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் தரப்பில் சாஹா, ஹோல்டர், அபிஷேக் சர்மா, கடைசி கட்டத்தில் ரஷீத்கான் சிறு பங்களிப்பு கொடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணியில் ருத்ராஜ், டு பிளிசிஸ் வழக்கம்போல் அட்டகாசமான தொடக்கம் கொடுத்தனர், ருத்ராஜ் 45, டு பிளிசிஸ் 41 ரன்கள் எடுக்க அப்போதே சி.எஸ்.கே வெற்றி உறுதியானது.

ஹெலிகாப்டர் ஷாட்

ஹெலிகாப்டர் ஷாட்

அடுத்தடுத்து சில விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், கடைசி ஓவரில் 3 ரன் தேவைப்பட தனது டிரேட் மார்க் ஹெலிகாப்டர் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் தல தோனி. சி.எஸ்.கே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றதை விடவும், தோனி அடித்த ஹெலிகாப்டர் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த ஆட்டம் முடிந்தவுடன் கேப்டன் தோனி கூறியதாவது:-

தோனி பேச்சு

தோனி பேச்சு

சி.எஸ்.கே பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்தது நிறைய அர்த்தம் உள்ளது. ஏனென்றால் கடந்த சீசனில் நாங்கள் அதிக ஆபத்தில் இருந்தோம். மீண்டும் வலுவாக திரும்பி வர வேண்டும் என்று கூறினோம். இந்த ஆண்டு நாங்கள் அதைச் செய்துள்ளோம். அணியின் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர், பவுலிங்ம் பேட்டிங் என அனைத்து துறைகளையும் சமநிலையில் வைத்திருப்பதற்கான பொறுப்புகளை அவர்கள் எடுத்துக்கொண்டனர்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

எனவே அணியின் இந்த நிலைக்கு வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாப்புக்கு முழு கிரெடிட் செல்ல வேண்டும். கடந்த 2020 சீசனில் ரசிகர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தோம். அப்போதும் எங்களுக்கு ஆதரவளித்த ரசிகர்களைப் பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை. இந்த முறை அவர்களின் நம்பிக்கையை திருப்பிச் செலுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தோனி கூறினார். ரசிகர்கள் பற்றி தோனி கூறியதால் சி.எஸ்.கே ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Story first published: Friday, October 1, 2021, 13:28 [IST]
Other articles published on Oct 1, 2021
English summary
Chennai Super Kings have entered the play-off round as the first team in the current IPL series. Captain Dhoni praised the CSK fans
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X