தோனி பாணியில் இன்ஸ்டாகிராமில் வீடியோ.. ஓய்வை அறிவித்தாரா தினேஷ் கார்த்திக்.. ரசிகர்கள் குழப்பம்!

சென்னை: பயிற்சியாளர்கள், சக வீரர்கள், ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தினேஷ் கார்த்திக் வீடியோ வெளியிட்டுள்ளதால், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளாரா என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அண்மையில் முடிந்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஃபினிஷராக விளையாடியவர் தினேஷ் கார்த்திக். 2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமாகி இருந்தாலும், தோனி என்னும் சுனாமியால் வாய்ப்பு கிடைக்காமல் தவித்த வீரர்களில் இவரும் ஒருவர்.

இருந்தாலும் அவ்வப்போது இந்திய அணிக்காக களமிறங்கி பல்வேறு வெற்றிகளை பெற்று கொடுத்தவர். குறிப்பாக 2007ம் ஆண்டு இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி தொடரை சமன் செய்ததற்கு இவரும் முக்கிய காரணம்.

“இனி மாற்றம் ஏற்படுமா பார்க்கலாம்?” பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. தினேஷ் கார்த்திக் முக்கிய கருத்து“இனி மாற்றம் ஏற்படுமா பார்க்கலாம்?” பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. தினேஷ் கார்த்திக் முக்கிய கருத்து

ஐபிஎல் தொடர்

ஐபிஎல் தொடர்

அதன் பின்னர் சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சில காலம் விலகி இருந்தார். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடர் மூலம் டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட அணிகளுக்கான விளையாடி இந்திய அணிக்குள் மீண்டும் வந்தார். தொடர்ந்து கொல்கத்தா அணிக்காக கேப்டனாகவும் செயல்பட்டார்.

மீண்டும் இந்திய அணியில்

மீண்டும் இந்திய அணியில்

2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை மீண்டும் பெற்றார். அதுவும் டி20 ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேனாக இவர் பார்க்கப்பட்டார். இதன் காரணமாகவே டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

டிகே வீடியோ

டிகே வீடியோ

டி20 உலகக்கோப்பைத் தொடர் முடிவடைந்த பின்னர் தினேஷ் கார்த்திற்கு இந்திய அணியின் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சியாளர்கள், சக வீரர்கள், நண்பர்களுக்கு நன்றி கூறி தோனியை போலவே வீடியோ ஒன்றை தினேஷ் கார்த்திக் பதிவிட்டுள்ளார்.

தினேஷ் கார்த்திக் நன்றி

தினேஷ் கார்த்திக் நன்றி

அந்த வீடியோவில் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்ற இலக்கை நோக்கி மிகக் கடுமையாக உழைத்தேன். அப்படி செய்வது பெருமையான உணர்வை தந்துள்ளது. எங்களது முயற்சியில் நாங்கள் கடைசி கட்டத்தில் வீழ்ந்தோம். ஆனாலும் அது என் வாழ்நாளில் மறக்க முடியாத பல நினைவுகளை கொடுத்துள்ளது என்று நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

இதன் மூலம் தினேஷ் கார்த்திக் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாரா என்ற ரசிகர்கள் குழம்பியுள்ளனர். சில நாட்களுக்கு முன் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளராக செயல்பட உள்ளதாக ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. தினேஷ் கார்த்திக் இதுவரை இந்திய அணிக்காக 26 டெஸ்ட், 94 ஒருநாள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
As Dinesh Karthik has released a video thanking his coaches, teammates and fans, there has been confusion among fans as to whether he has announced his retirement from international cricket.
Story first published: Thursday, November 24, 2022, 0:28 [IST]
Other articles published on Nov 24, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X