For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

போன முறை டுபிளெசிஸ்... இந்த முறை கூல்டர் நைல்..!! ரோகித் சர்மாவுக்கு ஒர்க் அவுட்டாகுமா அந்த ராசி..?

லண்டன்:ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரோகித் கொடுத்த கேட்சை, கூல்டர் நைல் கோட்டை விட்டது எங்கு போய் முடியுமோ என்று ஆஸி. ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி சற்றும் யோசிக்காமல் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஏன் எனில், ஓவல் மைதானத்தை பொறுத்த வரை, முதலில் மட்டையை பிடிக்கும் அணி அதிக ஸ்கோரை எட்ட முடியும்.

ஆஸி.க்கு எதிரான போட்டியில் தோனி அணிய உள்ளது இந்த கிளவுஸ் தான்..? வெளியான புதிய தகவல் ஆஸி.க்கு எதிரான போட்டியில் தோனி அணிய உள்ளது இந்த கிளவுஸ் தான்..? வெளியான புதிய தகவல்

பேட்டிங் தேர்வு

பேட்டிங் தேர்வு

அந்த அடிப்படையில், கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். அது தவிர மற்றொரு காரணமும் உண்டு. ரோகித் நல்ல பார்மில் இருப்பதாலும் , சிறந்த பந்து வீச்சு காம்பினேஷன் இருப்பதாலும் அவர் இந்த முடிவுக்கு வந்தார். ஆக அதன்படி, தொடக்க வீரர்கள் ரோகித்தும், தவானும் களம் இறங்கினர்.

ஸ்டார்க் ஓவர்

ஸ்டார்க் ஓவர்

இருவரின் ஆட்டத்திலும் சர்வ ஜாக்கிரதைத்தனம் தெரிந்தது. அவசரப்படாமல் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். ஆனால்... ஸ்டார்க் வீசிய 2வது ஓவர் கொஞ்சம் இந்திய அணிக்கு ஜர்க் கொடுத்தது. அந்த ஓவரின் 3வது பந்தை ரோகித் எதிர்கொண்டார்.

மிஸ்ஸான கேட்ச்

மிஸ்ஸான கேட்ச்

ஷார்ட் மிட் விக்கெட் திசையில் பந்தை தூக்கி அடித்தார். ஆனால், அந்த கேட்ச்சை தவற விட்டார் கூல்டர்நைல். ஒரு கணம் இந்திய முகாமே வெளிறி போனது. ரோகித்தும் ஒரு கணம் அதிர்ந்து போனது நன்றாகவே தெரிந்தது. ஆனால்.. நல்ல வேளை.. கேட்சை விட்டார் கூல்டர் நைல்.

 அன்றும் அப்படித்தான்

அன்றும் அப்படித்தான்

ஆக... ரோகித்துக்கு அதிர்ஷ்டம் இருந்தது என்றே சொல்லலாம். ஏன் என்றால்.. தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் ரோகித்துக்கு 2வது ஓவரில் டுபிளெசிஸ் கேட்ச்சை தவறவிட்டார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ராசிப்படி நடக்குமா?

ராசிப்படி நடக்குமா?

அதன்பின்னர் சுதாரித்துக்கொண்ட ரோகித், சதமடித்து கடைசிவரை களத்தில் நின்று அணியை வெற்றி பெற செய்தார். இந்த போட்டியிலும் ரோகித்துக்கு கேட்ச்சை தவறவிட்டுள்ளனர். ஆக... இந்திய ரசிகர்கள் தரப்பில் குஷியோ... குஷி... பார்ப்போம்... பெரிய இன்னிங்சை கொடுத்து ஆஸியை அலற வைக்கிறாரா?

Story first published: Sunday, June 9, 2019, 16:19 [IST]
Other articles published on Jun 9, 2019
English summary
Coulter nile misses rohit sharma’s catch.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X