For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே செய்த மிகப்பெரும் தவறு.. தங்கத்தை தவறவிட்டதால் ரசிகர்கள் ஷாக்.. தோனிக்கு பிறகு என்ன நடக்குமோ

கொச்சி: ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்துள்ள தவறால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஐபிஎல் 2023ம் ஆண்டு தொடருக்கான வீரர்கள் ஏலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் வழக்கத்திற்கு மாறாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்கத்தில் இருந்தே ஏலம் கேட்டு ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தது.

அதுவும் ஏலத்தில் தொடக்கத்திலேயே ஐதராபாத் அணியின் காவ்யா மாறன் மற்றும் சிஎஸ்கே கடும் போட்டியில் ஈடுபட்டு வந்தது உச்சகட்ட சுவாரஸ்யத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. எனினும் சிஎஸ்கே தரமான வீரர்களை வாங்கியது.

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. உச்சம் தொட்ட சாம் கரண்.. சிஎஸ்கே vs பஞ்சாப் இடையே நடந்த யுத்தம்! ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. உச்சம் தொட்ட சாம் கரண்.. சிஎஸ்கே vs பஞ்சாப் இடையே நடந்த யுத்தம்!

 சிஎஸ்கேவின் திட்டம்

சிஎஸ்கேவின் திட்டம்

டுவைன் பிராவோவுக்கு மாற்று வீரர் என்ற நோக்கத்துடன் சாம் கரணுக்கு குறி வைப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், அவரை விட்டுவிட்டு, இங்கிலாந்தின் மற்றொரு ஸ்டார் ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை வாங்கி இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்தது. இதே போல 2022ம் ஆண்டின் U-19 உலககோப்பையில் விளையாடிய ஷாயிக் ரஷித், ஹரி நிசாந்த ஆகியோரை சிஎஸ்கே வாங்கியிருந்தது.

தோனிக்கு மாற்று வீரர்

தோனிக்கு மாற்று வீரர்

ஆனால் தோனிக்கு மாற்று வீரரை தேர்வு செய்வதில் மட்டும் சிஎஸ்கே கவனமே செலுத்தவில்லை என்று தான் கூற வேண்டும். தோனிக்கு அடுத்தபடியாக மிடில் ஆர்டரில் சூழலுக்கு ஏற்ப பேட்டிங் ஆடுவது, விக்கெட் கீப்பிங் செய்வதற்கு நாராயண் ஜெகதீசன் மட்டுமே சிறந்த தேர்வாக பார்க்கப்பட்டார். அதற்கேற்றார் போல அவர் நல்ல விலைக்கும் வந்தார்.

பிரமாண்ட சாதனை

பிரமாண்ட சாதனை

சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்களை விளாசி நாராயண் ஜெகதீசன் உலக சாதனை படைத்திருந்தார். இதுமட்டுமல்லாமல் 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் அடித்த வீரர் என்ற ரோகித்தின் ரெக்கார்டையும் உடைத்தார். அப்படிபட்ட வீரர் வெறும் ரூ. 20 லட்சத்திற்கு தான் ஏலத்தில் கொண்டு வரப்பட்டார்.

கைவிரித்த சிஎஸ்கே

கைவிரித்த சிஎஸ்கே

தொடக்கத்தில் ஆர்வம் காட்டிய சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது. இரு அணிகளும் சீரான வேகத்தில் தொகையை உயர்த்த, ஒரு கோடியை நெருங்கியது. ஆனால் ஜெகதீசனுக்காக ரூ. 1 கோடியை கூட செலவளிக்க சிஎஸ்கே தயாராக இல்லை. இதனால் உலக சாதனை படைத்த வீரரை வெறும் ரூ. 90 லட்சத்திற்கு தூக்கி சென்றது கொல்கத்தா அணி. இதனால் இனி தோனிக்கு மாற்று என்ன செய்வீர்கள் என சிஎஸ்கே மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

Story first published: Friday, December 23, 2022, 18:12 [IST]
Other articles published on Dec 23, 2022
English summary
CSK Fans got shocked after lose Narayan Jagadeesan in IPL 2023 mini auction, here is the reason why?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X